Header Ads



மாயன் கலண்டர் முடிந்து புதுயுகம் பிறந்ததற்காக கொண்டாட்டம்



மெக்சிகோவின் மாயன் இனத்தவர் உருவாக்கிய காலண்டர் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே உலகம் அழிந்து விடும் என்ற பீதி நேற்று உலகம் முழுவதும் பரவியது. அதனால் அச்சம் அடைந்த பலர்  ஆன்மீக தலங்களில் தஞ்சம் அடைந்து இருந்தனர். ஆனால், மாயன் காலண்டரின் கூற்றுப்படி நேற்று உலகம் அழியவில்லை. 

எனவே மாயன் காலண்டர் முடிந்து புதுயுகம் பிறந்ததாக கருதி மெக்சிகோ, கவுதமலா உள்ளிட்ட நாடுகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மெக்சிகோவில் மாயன் இனத்தவரின் தொன்மையான நகரமான சிசென் இட்காவில் புதிய யுகம் பிறக்கும் கொண்டாட்டம் நடந்தது. அதில்  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி  கொண்டாடினர். 

மெக்சிகோவில் அரசு அதிகாரப்பூர்வமக இந்த கொண்டாட்டத்தை நடத்த வில்லை. ஆனால் அங்குள்ள தொன்மை வாய்ந்த பிரமீடு பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கூடி புது யுகத்தை வரவேற்றனர். கவுதமலாவிலும் புதுயுகம் பிறப்பு கொண்டாட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து நடந்த நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை அந்த நாட்டு அதிபர் ஒட்டோ பிரிஸ் தொடங்கி வைத்தார். 

தற்போது மாயன்கள் பற்றி அறிய பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்க கண்டத்தில் மாயன்கள் வாழ்ந்த பகுதிகளை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

No comments

Powered by Blogger.