Header Ads



இலங்கையர்களை நம்பாத சீனா - மஹிந்த சகோதரர்கள் அறிவார்களா..?


சுற்றுலா மூலமான வருவாயை அதிகரிக்க சீனா, விசா இன்றி பீஜிங் நகரில் தங்கலாம் என அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் எதிர்வரும் 1 ஆம்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. 

இதன்படி சீனா வழியாக செல்பவர்கள் பீஜிங் நகரில் 72 மணி நேரம் தங்கலாம் எனவும் அவர்களுக்கு விசா தேவை இல்லையெனவும் சீனா அறிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் உட்பட அண்டை நாட்டுக்காரர்களுக்கு சீனா இந்த புதிய திட்ட சலுகையை வழங்கவில்லை. சீனா இந்த புதிய சலுகையை கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, கட்டார் உட்பட 45 நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கம் இலங்கையில் சீனர்களுக்கு அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தி, பெரும்பாலான கொந்தராத்துக்களையும் சீனாவுக்கு வழங்கி, ஏனைய நாடுகளுடன் பகையை வளர்த்துவரும் நிலையில் சீனாவோ இனங்கையர்களை நம்பி விசா இல்லாமல் தமது நாட்டில் தங்கியிருக்க அனுமதி மறுத்துள்ளமை இங்கு  கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.