Header Ads



அமெரிக்க பாடசாலை ஆசிரியர்களின் கைகளில் துப்பாக்கிகள்..!

அமெரிக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுனில் உள்ள ஒரு பள்ளியில் புகுந்த வாலிபர் 20 குழந்தைகள் உள்பட 28 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இச்சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் உரைய வைத்தது.

குறிப்பாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மிகவும் அஞ்சுகின்றனர். எனவே, கொலைகாரர்களிடம் இருந்து குழந்தைகளை காக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒகலகோமா, மிசோரி, மின்னசோடா, தெற்கு டகோடா, ஓரிகள் ஆகிய மாகாணங்களில் உள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதற்கான முயற்சியில் அம்மாகாண எம்.பி.க்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாண பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் துப்பாக்கி எடுத்துச் செல்ல தடை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. அதே நேரத்தில் பள்ளிகள் அதிகாரப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், அங்குள்ள ஹர்ரால்டு நகர பள்ளிக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் பாதுகாப்புடன் பள்ளி சென்று வருவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் பள்ளிக்கு பாதுகாவலரை நியமிக்க போதிய நிதிவசதி இல்லை. எனவே, ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி பெற்று தரப்பட்டுள்ளது. துப்பாக்கியை கையாள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என பள்ளி கண்காணிப்பாளர் டேவிட் திவீட் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.