காலி முகத்திடலில் இருந்து கல்கிஸ்ஸ வரையில் செயற்கை கடற்கரை
காலி முகத்திடலில் இருந்து கல்கிஸ்ஸ வரையில் செயற்கை கடற்கரையொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதற்கமைய சுமார் 240 ஏக்கரிலான செயற்கை கடற்கரையை நிர்மாணிப்பதற்கு எண்ணியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் பிரேமரத்ன குறிப்பிட்டார்.
இந்த செயற்கைக் கடற்கரை சுமார் பத்து கிலோமீ்ற்றர் தூரம் கொண்டதாக அமையவுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதற்கான ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செயற்கை கடற்கரை நிர்மாணப்பணிகளை 2015ஆம் ஆண்டிற்குள் நிறைவுசெய்ய எண்ணியுள்ளதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. sn
Post a Comment