Header Ads



எகிப்தில் பிரபல இமாம் பள்ளிவாசலில் அடைத்துவைப்பு - மதசார்பற்றோர் அடாவடி


எகிப்தின் புதிய அரசியலமைப்புக்கான இரண்டாவது சுற்று சர்வஜன வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் இஸ்லாமியவாதிகள் இன்று 21-12-2012   பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. எகிப்தின் இரண்டாவது தலைநகரான அலக்சானட்ரியாவில் எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் மதத் தலைவர், ஒருவரை பள்ளிவாசலுக்குள் 14 மணி நேரம் அடைத்து வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல இஸ்லாமிய அமைப்புகளும் பங்கேற்றவுள்ளன.

அலக்சான்ட்ரியாவிலுள்ள குவைத் இப்ராஹிம் பள்ளிவாசலின் இமாம் ஷெய்க் அஹமட் அல் மஹல்வியை கடந்த வெள்ளிக்கிழமை மதச் சார்பற்றோர், முபாரக் ஆதரவாளர்கள் கொண்ட எதிர்ப்பாளர்கள் பள்ளிவாசலுக்குள் 14 மணி நேரம் அடைத்து வைத்திருந்தனர். பள்ளிவாசல் இமாம் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க பிரசாரசம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு அவர் பள்ளிவாசலுக்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்ப்பாளர்களின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் படி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி, சலபி அமைப்பின் அரசியல் கட்சியான நூர் கட்சி, அசாலா கட்சி, அல் கமா அல் இஸ்லாமியா மற்றும் கட்டுமான மற்றும் அபிவிருத்தி கட்சி ஆகியன அழைப்பு விடுத்துள்ளன.

“வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் மதச்சார்பற்றோரின் கொடூர முகத்தை வெளிக்காட்டுகிறது” என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் போச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.