Header Ads



கிழக்கு மாகாணத்தில் வெள்ள அபாயம் - முன் ஆயத்ததுடன் செயற்பட முதலமைச்சர் உத்தரவு

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அபாயம் குறித்து முன் ஆயத்ததுடன் செயற்படுமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் கௌரவ. நஜீப் அப்துல் மஜீத் அவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக தற்போது மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும்பட்சத்தில் போக்குவரத்து துண்டிப்பு, மக்கள் இடம்பெயர்வுகள் போன்றன இடம்பெற வாய்ப்புள்ளது.

இதனால் மக்களுக்கு உணவு உள்ளிட்ட இதர அவசர உதவிகளை வழங்க தயாரான நிலையில் இருக்குமாறும், மேலதிக தேவைகள் ஏற்படின் உடனடியாக முதலமைச்சர் அலுவலகதிற்கு தெரிவிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மக்கள் நீண்டகால துயரினை அனுபவித்தவர்கள். தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணிகரமான நடவடிக்கையினால் யுத்த பீதியிலிருந்து விடுபட்டு நிம்மதியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பருவகால மழை, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் இம்மக்கள் பாதிக்கப்படும்போது தாமதமின்றி நிவாரணம் வழங்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமென தான் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  

(முதலமைச்சரின் ஊடக பிரிவு)

No comments

Powered by Blogger.