சிங்கள இனவாதிகளுக்கு எதிராக பதுளை முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியம்..!
(முக்கிய குறிப்பு கீழ் குறிப்பிடப்படும் கட்டுரையுடன் பதுளை ஜும்மா பள்ளிவாசல் அல்லது பதுளை முஸ்லிம்கள் எவருக்கேனும் மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் அதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் தமது விளக்கங்களை எமது இணையத்திற்கு அனுப்பிவைக்கமுடியும்)
இணை செயலாளர்,
மலையக முஸ்லிம் மாநாடு
பதுளை)
கடந்த சில மாதங்களாக பதுளை முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள், சூழ்ச்சிகள், இனவாத செயல்கள் கூர்மைபடுத்தபட்டுள்ளன. “ பொது பல சேனா'' என்ற அமைப்பு நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஏக காலத்தில் முடுக்கி விட்டிருந்தாலும் அதன் பிரதான இலக்குகளில் ஒன்றாக பதுளை பிரதேசம் காணப்படுகிறது.
இதற்கான பிரதானக் காரணம் இன்று பதுளை மாநகர எல்லையில் வாழும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு வீதம் முஸ்லிம்களாக இருந்தும், சுமார் 9.000 மேல் வாக்களர் பலத்தை கொண்ட இரண்டாம் பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் இருந்தும், காத்திரமான தலைமைத்துவம் ஒன்றில்லாததே இந்த்நிலமைக்கு காரணம் என்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
கடந்த சில மாதங்களுக்குமுன் “ ஊவா கொயும் மெத் சங்க்விதாணய” எனும்பவுத்த அடிப்படைவாத அமைப்பொன்றின் மூலம் ஐந்து பக்கங்களை கொண்டதொரு துண்டுப்பிரசுரத்தை தமது தொலைபேசி இலக்கங்களுடன் வெளியிட்டது . குறிப்பிட்ட இத்துண்டு பிரசுரத்தின் மூலம் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷக்கருத்துகளை வெளியிட்டிருந்தது.
அதை தமிழ் மொழி மூலம் மொழிபெயர்த்து ஊடகங்களில் வெளியிட்டு உரிய சமூக தலைமைகளை தெளிவுபடுத்த எடுத்த முயற்சியை “ஒரு சமூக விரோத செயலாக சித்தரித்து சிலர் விமர்சித்ததுடன் இதை மொழி பெயர்த்தன் மூலம் சமூக பிரச்சினை உருவாகலாம் என்று குற்றம் சுமத்தினர். குறிப்பிட்ட அதே காலத்தில் பதுளை ஜும்மா பள்ளிவாயலில் தொப்பி அணிவது சுன்னத்தா இல்லையா என்ற கருப்பொருளில் கொத்துபா உரைகள் நிகழ்த்தப்பட்டன.
ஆனால் குறிப்பிட்ட துண்டு பிரசுரத்தின் தமிழ் ஆக்கத்தினை வாசித்தறிந்த வெளிப்பிரதேச முஸ்லிம்கள் அதிர்சிக்கு உள்ளாகினர். நாட்டின் நாலபக்கங்களில் இருந்தும் இது பற்றி தகவல் அறிந்தவர்கள் விசாரிக்கத் தொடங்கினர். கொழும்பில் இது விடயமாக பல முஸ்லிம் சிவில் அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி ஊவா கொயும் மெத் சங்க்விதானயவிட்கு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிழக்கு மாகாணசபை தேர்தல் மேடைகளில் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் இவ்விடயம் பிரதான பேசுபொருளாக சிலாகிக்கப்பட்டது.
ஆனால் உள்ளூரில் இது விடயமாக எந்தவித எதிர் நடவடிக்கையும் காத்திரமாக மேற்கொள்ளப்படவில்லை. இந்தநிகழ்வுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பதுளை ஜும்மா பள்ளியில் நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வில் பதுளை முதியங்கனை விகராதிபதியையும்,பதுளை மாவட்ட செயலாளரையும், இன்னும் சில சிங்கள உள்ளூர் அரசியல் தலைவர்களையும் பங்குபெற செய்தது இதற்காகத்தான் என்று குறிப்பிட்ட இப்தார் நிகழ்வை இதற்கான பதில் நடவடிக்கையாக கூறப்பட்டது.
மேலும் நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிராக உலகளாவிய ரீதியில் ஒன்று திறண்டு தமது எதிப்பை காட்டி மாபெரும் எதிர்ப்பு பேரணிகளை பாரிய அளவில் மேற்கொண்டனர்.
இவ்வெதிர்புக்களை கண்டு உலகமே தகைத்து நின்றது. எமது நாட்டிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது. ஏன் பதுளைக்கு பக்கத்தில் உள்ள சிறிய முஸ்லிம் குக்கிராமங்களான ஹாலிஎல, பஸ்சர, பண்டாரவெள, வெளிமட போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் ஆர்பாட்டங்களை நடத்தி தமது ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.
அனால் பதுளையில் மட்டும் இவ்வெதிர்ப்பு ஆர்பாட்டங்கள் யாவுமே தம்மை பெயர்போட்டுக்கொண்டு விளம்பரப்படுத்தளுக்காக செய்வதாகக் கூறி முஸ்லிம்களின் மனவெழுச்சி கொச்சைபடுத்தபட்டது. குறித்த ஆர்பட்டங்களின் போது நடைபெறும் அடவடிததனங்களை நாம் இஸ்லாத்தின் பார்வையில் வன்மையாக எதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருதில்லை.
அனால் ஆர்ப்பாட்டம் என்பது தமது கருத்துகளை வெளிப்படுத்தக் கூடிய உயரிய ஊடகமாகவே கருதப்படுகிறது. அதனாலதான் இவூடகமுறையை சட்டத்தாலும் தடைசெய்ய முடியாதுள்ளது. இன்று பதுளை முஸ்லிம்களுக்கு இது சட்டப்படி குற்றமாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்யவும் முழங்காலுக்கு கீழ் சுடவும் முடியும் என்று அறிவுறுத்ததப் பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்களுக்காகவும், இஸ்லாதிற்க்காகவும் ஓரணியில் திரண்ட முஸ்லிம் உம்மாஹ்வின் மனவெழுச்சியை நாம் கொச்சைபடுத்த முடியாது. சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் முஸ்லிம்கள் இஸ்லாதிற்க்காகவும், நபி (ஸல்) அவர்களுக்காகவும் ஓரணியில் ஒன்று திரண்ட வேளையில் பதுளை முஸ்லிம்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டிருந்ததால் முடங்கி இருந்த பதுளை முஸ்லிம்களின் பலஹீனத்தை புத்த அடிப்படைவாதிகள் கண்டுகொண்டு கொண்டதால் பதுளை மாநகரில் அடிக்கடி இரண்டு அரபட்ட பேரணிகளை “பொது பல சேணா” அமைப்பு வெள்ளிக்கிழமைகளை இலக்காக கொண்டுநடத்தியது.
“பதுளை முஸ்லிம் வியாபார நிலையங்களில் பொருட்களை வாங்கவேண்டாம்,முஸ்லிம்கள் பவுத்தர்களின் ஊழியத்தை சுரண்டுகிறார்கள் சிங்கள யுவதிகளை திட்டமிட்டு கடததிச் சென்று “அபாயா”அணிவிக்கின்றகள் , இவர்களது ஷரியா சட்டத்தை அமுல் படுத்தி எதிர்கால எமது சந்ததிகளை கொன்றொழிக்க திட்டம் போட்டுள்ளர்கள்” போன்ற கருத்துக்களை ஊவா மாகாணம் எங்கும் தீவிரமாக பரப்பிக் கொன்ன்டிருந்த வேளையில் தான் பதுளை முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடையில் புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட கையுறை ஒன்று விற்கப்பட்டதாக கிளப்பப்பட்ட புரளியாகும் .
இது திட்டமிட்டு செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை துள்ளியமாக விளங்கலாம். குறித்த முஸ்லிம் வியாபாரியை சந்தேகத்தில் கைதிசைய வரும் போது, பல இனம்தெரியாத முகங்களும், ஊடகவியலாளர்கள் என கூறக்கூடியவர்களும் அங்கே ஏற்கனவே வதிருந்தது திட்டமிட்டு புகைப்படங்களை எடுத்ததும்,கைது செய்யப்பட்டவர்களை போலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது “ஊவா கொயும் மெத் சங்விதானைய” வினால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் குறிக்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தையுடைய பொல்வத்த பன்சலையின் பிரதம தேரோ சகிதம் இன்னும் பலரும் அங்கு ஏற்கனவே கூடியிருந்ததும் இச்சதியின் பின்னணியையும் சதிகாரர்களையும் கோடிட்டு காட்டுகின்றது.
ஆனால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் போலீசில் ஆஜராவதற்கோ நியாயத்தை எடுத்துரைக்கவோ பதுளை நகரில் முஸ்லிம்கள் மத்தியில் பரந்துபட்டதொரு அமைப்போ அல்லது காதிரமனதொரு பிரதிந்திதுவ குழுவோ இயங்கவில்லை என்பதையும் கோடிட்டு காட்டுகின்றது.
ஏனெனில் அடுத்தநாள் வெள்ளிக்கிழமை குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க வேண்டாம் என்று ஆர்பாட்டம் செய்தபோதும் , ஜும்மாதொழுகையின் பின் இரு முஸ்லிம் சகோதரர்கள் போலிஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போதும் இதற்கெதிராக எவ்வித பதில் நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் “சமாதானமாகவே” நிகழ்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.
ஆகவே அடுத்தநாள் மீண்டும் ஒரு துண்டு பிரசுரம் தொலை பேசி இலக்கங்கள் சகிதம் பௌத்தர்களுக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்டது. அதில் “ தாங்கள் பௌத்த மதத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளதாகவும் , உண்மையான பௌத்தர்கள் மேலும் மேலும் தங்களுடன் இணைந்துகொள்ளுமாரும்” வேண்டப்பட்டிருந்த்தது. அதை தொடர்ந்து அடுத்தநாள் மீண்டும் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆடுகளை கடத்திச் சென்று அதில் சிலதை கொன்று விட்டு தொலைவில் வீசி எறியப்பட்டிருந்தது .
இவ்வளவு நிகழ்ந்தும் இதுவரை பதுளை வாழ முஸ்லிம்கள் ஒன்றிணைத்து சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி காத்திரமானதொரு செயற்குழு அமைக்கப்படவில்லை. பதட்டமான நிலையிலும் கூட கடந்த வெள்ளிக்கிழமை (3௦.11.2012) குத்பா உரை “கூட்டு துவா” விற்கான ஆதாரங்களை அலசுவதற்காக பயன்படுத்தபடுவது எமது துரதிர்ஷ்டவசமான நிலைமையையே எடுத்துக் காட்டுகின்றது.
முஸ்லிம்களின் வியாபாரம் இலக்கு வைக்கப்படுள்ளது, ஆனால் முஸ்லிம் வியாபாரிகளின் கூட்டமைப்பொன்று எம்மத்தியில் இல்லாத அதே வேளை ஊவா வர்த்தக சங்க முஸ்லிம் பிரதிநிதிகளின் வகிபாகம் இவ்விடயத்தில் எந்தளவு பெறப்பட்டுள்ளது என்பதை அறியமுடியாதுள்ளது. ஆரம்பத்தில் குறிப்பட்ட துண்டு பிரசுரத்தை மொழிபெயர்த்த போது அதற்கெதிராக வெகுண்டெழுந்தவர்கள், முஸ்லிம் வியாபார சகோதரர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்ட போது போலீசில் நியாயம் பேச எவரும் முன்வரவில்லை.
வெள்ளிக்கிழமை ஜூம்மாவிற்குப்பிறகு “பொது பல சேனா” ஆர்பாட்ட பேரணியின் போது தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் அப்பாவிகள் . அவர்களை போலீசில் ஆஜர் படுத்தி நியாயம் பெற்றுத்தரவோ அவர்களின் வாகனதிட்கு ஏற்பட்ட சேதம் உரிய முறைப்பாடு செய்ய எவரும் முன்வரவில்லை. ஆனால் போலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆலோசனை கூறினார் என்பதற்காக நடந்த அடாவடித்தனங்களை போலீசில் எவ்வித முறைப்பாடும் செய்யாமல்,மரம் வீழ்ந்ததால்தான் முச்சக்கர வண்டி சேதமானது என்று பொலிசாரிடம் புகார் எழுதிகொடுத்து சமாதானம் பேச முன்வருகிறது முஸ்லிம்தலைமைத்துவம்.
பல் சமுக அமைப்பை கொண்ட இலங்கை நாட்டில் முஸ்லிம்களும் கௌரவமான பிரஜைகளே. ஒரு குடிமகனின் பிரஜா உரிமை என்பது இலகுவாக மதிக்கதக்கதல்ல. இந் நாட்டில் வாழவதற்க்கும் சாவதற்கும்,குடும்பம் நடத்தவும்,கொடுக்கல் வாங்கல் செய்யவும், மதத்தை பின்பற்றவும், மதத்தை துறக்கவும்,கருத்துக்களை வெளியிடவும்,சமூகத்துடன் சேரவும் பிரியவும் மனித வாழ்வின் இன்னோரன்ன அனைத்துவிடயங்களிலும் உரிமை பெற்றவனாவான்.
பிரஜா உரிமை மறுக்கப்பட்டவன் இவ்வுரிமைகள் அனைத்தையும் மறுக்கப்பட்டவனாவான். இந் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பிரஜா உரித்துடைய இந் நாட்டின் கண்ணியமிக்க குடிமக்களாவர். ஆனால் எமது உலமாக்கள் அநேகமான குத்பா உரைகளில் “நாம் அந்நிய நாட்டில் வாழுகின்றோம் ஆகவே நாம் நிதானமாகவும் எடுத்துகாட்டாகவும் வாழ வேண்டும்” என்று முழங்குகின்றார்கள். இக்கருத்தானது முஸ்லிம்களை பல் சமூக அமைப்பிலிருந்து ஒதுங்கி வாழ வைக்கும். முஸ்லிம்களின் மனவெழுட்ச்சியை கீழே போட்டு மிதித்து விடும். தாமே தம்மை இரண்டாம் பிரஜையாக எண்ணவைக்கும். ஆகவே இந் நாட்டு முஸ்லிம்பிரஜைகள் இந் நாட்டு குடிமகன் என்ற வகையில் வியாபாரம் செய்யவும் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உரிதுடயவர்களே.
இந்த வகையில் அனுமதிக்கப்பட்டவொரு வியாபாரம் செய்வதற்காக உரிய அனுமதி பத்திரங்கள் பெற்று வருமான வரிகளை உரிய முறையில் செலுத்தி இந்தநாட்டு சட்டவிதிகளுக்குமைய மேற்கொள்ளும் ஒரு வியாபார நிலையத்தில் “கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம்” என்பது சட்டப்படி குற்றமாகும். ஒருவன் தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்தலாம், அதேவேளையில் இன்னாரின் கடையில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்று எவராவது உத்தியோகபூர்வமாக விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
ஆகவே முஸ்லிம்களுக்கு காணிகளை விற்காதீர்கள் என்று கூறுவதும் இந்தநாட்டு முஸ்லிம்களுக்கு தேவைக்கதிகமாக உரிமைகள் வழங்கப்படுள்ளது என்று கூறுவதும், விரும்பினால் இருங்கள் அல்லது வேறு நாடுகளுக்கு சென்றுவிடுங்கள் என்று கூறுவதும் எமது பிரஜாஉரிமைக்கு விடுவிக்கப்படும் அச்சுறுத்தல்களாகும். பதுளை முஸ்லிம்களை பொறுத்தவரையில் பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ பிரதிநிதித்துவம் இல்லாத சமூகம் , ஆன்மீக ரீதியாகவும் ஏகோபித்த தலைமைத்துவம் ஒன்றை பெறாத சமூகம். தலைமைத்துவம் அற்ற சமூகம், பாதுகாப்பற்ற சமூகமாகவே கருதப்படும்.
இதனால் தான் பதுளை ஜும்மா பள்ளிக்கு அழைத்துவரப்பட்ட உள்ளூர் அரசியல் பிரமுகரான மகாண சபை உறுப்பினர் சுஜீவ ஜெயசிங்க அவர்களும், அமைச்சர் நிமல் சிறிபால தி சில்வா அவர்களின் இணைப்பு செயலாளர் பர்சி விஜெதாசே அவர்களும் இந்நிகழ்வுகளை பற்றி குறிப்பிடும் போது “இது ஒரு சிறிய கும்பலின் செயற்பாடு, அடையாளம் இல்லாத இவர்களின் செயற்பாடுகள் பற்றி நீங்கள் அச்சப்பட தேவையில்லை, எங்களது ஜனாதிபதியும், அமைச்சரும் இனவாத அரசியல் செய்பவர்கள் அல்லர், இதுவரை செயற்பட்டது போல் நீங்கள் பொறுமையாக செயற்படுங்கள்.” என்று கூறி செல்லும் போதும் கூடியிருந்தவர் ஏகோபித்த மனதாக ஆமோதித்து தலைஅசைத்து செல்ல வேண்டியிருந்தது.
இந்தநிலையை கருத்திற்கொண்டு அண்மையில் ஜூம்மாப்பள்ளி நிர்வாக சபை மூலம் கூட்டப்பட்ட அவசர கூட்டத்தின் போது இந்த விடயத்தில் நாம் ஊடகத்தை உச்ச கட்டமாக பயன்படுத்துவதால் எமது பிரச்சனையை மேலிடத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று ஆலோசனை செய்யப்ப்ப்பட்டு ஒரு “ஊடக சந்திப்பை” உள்ளூரிலோ கொழும்பிலோ செய்யலாம் என கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கான அனுசரணையை பெற்றுத்தர உரிய அமைப்புகள் முன்வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது தேசிய அமைப்பிலும், சர்வதேச மட்டத்திலும் பல நன்மைகளை ஏற்ற்படுத்தக்கூடும் என்றும் கருத்து வெளியிடப்பட்டது. அனால், சபையில் இருந்தோர் இக்கருத்தை ஆதரித்தபோதும் ஒருவரின் தனிப்பட்ட முடிவால் அது நடைமுறை படுத்த முடியாது போனது.
ஆகவே......
இன்னும் தாமதமாகவில்லை, பதுளை நகரில் மூன்று ஜும்மா பள்ளி வாசல்கள் உட்பட 20க்கும் மேற்ற்பட்ட பள்ளிகள் உள்ளன. முஸ்லிம் பாடசாலைகளும் பல சமூக சேவை அமைப்புகளும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஜம்மியத்துல் உலமா சபையொன்றுள்ளது. ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரயும் ஒன்றிணைத்து ஒரு சிவில் பாதுகாப்பு அமைப்பொன்றை அமைத்து இனிவரும் காலங்களில் நாம் எமது செயற்பாடுகளை முன்வைப்போம் என்றல் அதற்கு ஒத்துழைத்து செயற்ற்பட இன்றும் தயாராக உள்ளோம். அல்லது ஒரு சிலரின் தான்தொன்றித்தனத்தால் ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்புக்குகள்ளாகுமானால் அதன் முழு பொறுப்பையும் நிர்வாக சபையே ஏற்கவேண்டும். பதுளையில் ஏற்றப்பட்டுள்ள இந்தநிலையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புகள் கவனத்தில் ஏற்று பதுளைக்கு தங்களாலான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்!
பதுளை முஸ்லிம்களே ஒற்றுமையாக முதுகெலும்பு உள்ளவர்களாக மாறுங்கள்.தாடியையும் தொப்பியையும் பற்றி பேசி உங்களை அளிதுக்கொள்ளாதீர்கள்.அல்லாவின் சோதனையை பயந்து கொள்ளுங்கள்.நீங்கள் நவீன ஜாகிலியத்தில் இருந்து வெளியே வாருங்கள்.அல்லாஹ் உங்களுக்கு
ReplyDeleteநேர்வளிகாட்டுவானாக
இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பாதுகாக்க முன்வாருங்கள் அன்பின் சகோதரர்களே
ReplyDeleteமேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.[Al Qur'an 14:42]
ReplyDeleteis there any muslims exist in sri lanka???? i have doubt.if we are muslim, we can not keep quite on this situation. lets think first, are we really muslim as per quran and sunnah??? if anyone say yes, lets unite and take action, if any one keep quite, they have to think really are we??
ReplyDeleteEmadhu samuhattai kappadhu em kattaya kadamai... Ondru kudi seytpattal vettri kaanalam. .. Thani mudivugalll sellupadiyagadu... Allah will help us. .. Mr.muzammil kuriyadai pol ondru kudi amaipondrai uruvakki seytpadungell. Vellam thalaki meala pona poraw onnum saiya eala wara moda try pannunge... Illavidin em samdayame illappugalai ilakka neridum... Adha uttutu thoppi thaadii thevaya idhu. .. Thayvu saidhu payandavange mudhu mul illadavange vaaya potti kondu ikkurai nallam. .. Sairavangala saiya udungappa... Selfishha irundinge naasam.... Mulaya allah ennathuku padachi irukkan yosinge. ..... Plz ottrumayaga seytpadungell allahvukkaha emadhu samugattukkaha.... Ya allah emadhu samugattai kappayaga ameen
ReplyDeleteAssaalamu alaikkum help to our ummah.... Dnt be slfsh.. Ondru serndu mudivugalai edungelll.... Vellam varum mun anai kattungelll. ... Allah will help us dnt be affraid. .. Ondru serungelll illavidin em samugam siralindu vidum. think panni parunge sagodergale... Mudhu mull illati ennathuku idhula noliringe sairavangalku saiya udunge thalaimaiththuvam olunge irunda oru pretchinaum illaa... Enaglkullaye sanda thoppi thaadiii periya sufiyalnnu neanapu.. Inga evalv probblems ikki adha pakuralla... Thayavu senjii elumda sainge illati utuvalkaviii summa irunge. .. Ippa mudiveduthu saiyatii ellam mandaya potodana saiyava??? Brain ikki yosikka.... Mr.muzzamil kuriyadai pol ondru serndhu sayatpattal undu vaalvu illati innalillahi vainnailaihi rajiun thaaan... Aaramba kalattilaye avar vilippunartiullar adhatku avarukku eadir pattirgal indru. ..... Allahu akbar enna vaapa idhu.. Mr.muzammil realy ur great keep it up help to our muslimz allahdakawall...
ReplyDelete