Header Ads



எகிப்தில் புதிய அரசியலமைப்பு - நாட்டை கட்டியெழுப்ப இஹ்வானுல் முஸ்லிமின் அழைப்பு



எகிப்தில்  புதிய அரசியமைப்பு நகல் அந்நாட்டின் அரசியல் சாசனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையில் ஜனாதிபதி முர்சி கைச்சாத்திட்டுள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வ முடிவுகள் எகிப்து தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதில் புதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டுக்கு அண்மித்தோர் ஆதரவு அளித்திருப்பதாக அறிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்தே அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டு ள்ளார். 

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எகிப்தில் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படவேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எகிப்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மொஹமட் முர்சிக்கு ஆதரவானோர் அறிவித்துள்ளனர். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் பாஹ்தி, “ஆண், பெண், முஸ்லிம், கிறிஸ்தவர் அனைவரும் ஒன்றிணைந்து எகிப்தை மீளக்கட்டியெழுப்பும் பணியை ஆரம்பிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.


2 comments:

  1. "IHVANUL MUSLIMEEN" is real example for all "thawa" moments. masha allah

    ReplyDelete

Powered by Blogger.