மன்னாரில் கடும் மழை + வெள்ளம் - மக்கள் பாதிப்பு, போக்குவரத்து துண்டிப்பு
(sfm) மன்னார் மாவட்டம் மல்வத்து ஒயாவிலிருந்து வரும் நீர் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் 18 அடியைத் தாண்டி தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், முதலி, நானாட்டான், மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
1284 குடும்பங்களைச் சேர்ந்த 4847 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 848 குடும்பங்களைச் சேர்ந்த 2960 பேர் பாடசாலை உள்ளிட்ட ஒன்பது இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.
பண்ணை வெட்டுவான், இராசைமடு, மருதங்கேணி, மற்றும் அச்சங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஆற்றை அண்மித்த பகுதிகளில் இருப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள சில கிராம மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
மன்னார் - மதவாச்சி, முருங்கன்- சிலாபத்துறை, சிலாபத் துறை - புத்தளம் ஆகிய பாதைகள் மூடப்பட்டடுள்ளது. மன்னாரிலிருந்து யாழ்பாணம் செல்லும் வழியில் பாலையாற்றில் ஒன்றரை அடிக்கு மேல் நீர் மட்டம் அதிரித்து காணப்படுதாகிறது.
மன்னார் மாவட்டத்திற்கான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDelete