மலாலாவை தனது மகள் சகிதம் சந்தித்தார் பாகிஸ்தான் ஜனாதிபதி (படம்)
பாகிஸ்தான் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய மாணவி மலாலா தாலிபன்களால் சுடப்பட்டார். தலை மற்றும் முகத்தில் குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்த 14 வயது மாணவியான மலாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல் நிலை மோசமடைந்ததை அறிந்த இங்கிலாந்து அரசு, கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி அவரை லண்டனுக்கு கொண்டுவந்து, சிகிச்சை அளித்து வருகின்றது. தற்போது பிரிமிங்காமில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைப் பெற்றுவரும் உடல் நலம் தேறி வருகின்றார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஆசிப்அலி சர்தாரி, மலாலாவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருடைய மகள் ஆசீபா சர்தாரியும் அவருடன் சென்றிருந்தார். பாகிஸ்தான் பெண்களின் எதிர்ப்புத்திறனின் அடையாளமாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போரின் சின்னமாகவும் மலாலா விளங்குகின்றார்.
அவரை கவனித்துக் கொள்வது பாகிஸ்தான் தேசிய பொறுப்பாகும். மலாலாவுக்கு வேண்டிய அனைத்தையும் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து செய்யும் என்று சர்தாரி கூறினார். சர்தாரியின் மகள் ஆசீபா சர்தாரி, மலாலாவுக்கு சால்வை பரிசளித்து ஆறுதல் கூறினார்.
Post a Comment