முசலி பிரதேசத்திற்கான தொடர்பு முற்றாக துண்டிப்பு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மன்னாரில் தொடர்ச்சியாக பெய்த பலதத் மழை காரணமாக இன்று (28) வரை மாவட்டத்தில் 23,300 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரேன்லி டிமெல் தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் அடைமழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்பவற்றால் பெருமளவான மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பாக சுமார் 5765 குடும்பங்களைச் சேர்ந்த 23,300 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவர்கள் தற்போது 51 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக குறித்த பிரதேசச் செயலளர்களினூடாக செய்துவருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் முசலி பிரதேசம் முற்றாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதயில் உள்ள பல கிராம மக்களுக்கான உணவுவகைகள் விநியோகிப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான உணவுப் பொருட்களை புத்தளத்தில் இருந்து கடல்வழியாக வள்ளங்கள் மூலம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினூடாக மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இப்பிரதேசத்தில் 2638 குடும்பங்களைச் சேர்ந்த 9426 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பிரதேசச் செயலாளர் தெரிவித்தார்.
Post a Comment