Header Ads



அம்பாறை பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளுடன் இராணுவ அதிகாரிகள் சந்திப்பு (படங்கள்)


(எம்.பைஷல் இஸ்மாயில்)

அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள், உலமா சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண இராணுவ அதிகாரிகள் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று ( 08.12.2012 ) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, 631 படைப்பிரிவின் பிரிகேடியர் கொமாண்டர் கேனல் பிரியன்த கமகே,  சிவில் பாதுகாப்பு தொடர்பான அதிகாரி கொமாண்டர் பிரசன்னா, அம்பாறை மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேனளத்தின் தலைவர் டாக்டர் அஸீஸ், செயலாளர் எம்.எல்.எம்.ஜமால்டீன், அம்பாறை மாவட்ட உலமா சபையின் செயலாளர் விரிவுரையாளர் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா (நழீமி) உட்பட பெருமளவிலான உலமாக்கள், இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டு கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பின் நோக்கம் சமூகங்களுக்கிடையே ஐக்கியத்தை வளர்ப்பதும், இளைஞர்களுக்கிடையே பரவிவரும் போதைவஸ்து, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தடுப்பதில் சமய சமூகத் தலைவர்களுக்கு விழிப்பூட்டி அரச பாதுகாப்புப் படையின் ஆதரவை வழங்குவதாகும்.

இன்றைய கூட்டத்தில் சிறந்த கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொண்டு நமது பகுதியில் இன ஐக்கியத்துடனான சிறந்த இளைஞர் சமூதாயமொன்றை கட்டியெழுப்ப எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படவும் உறுதி பூண்டனர்.

அத்தோடு எந்தநேரத்திலும் எவ்வாறான பிரச்சிணைகள் ஏற்பட்டாலும் இராணுவத்தினர் உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு எப்போதும் இருக்கவேண்டும். பலமானதொரு மக்கள் முன்னேற்றமே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். என்று இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா பேசும்போது குறிப்பிட்டார்.













No comments

Powered by Blogger.