Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா..?


இறந்தோருக்காக பொது இடத்தில் தீபம் ஏற்றியமைக்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்பது நியாயமாக இருந்தால் நாட்டின் அரசியல் சாசனத்துக்கெதிராக செயற்பட்டு இனங்களிடையே மோதல்களை உருவாக்க முயலும் ஹெல உறுமய போன்றவர்களுக்கும் புனர்வாழ்வளிக்க அரசு முன்வர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த நாட்டின் வரலாற்றை பார்க்கும் போது சிறிய குழுக்களினாலேயே தமிழ் மக்களுக்கெதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு கடைசியில் 83 கலவரத்தில் முடிவுற்றது. இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்த ஒரு சிறு குழுவே முற்படுகிறது எனக்கூறி வாழாவிருப்பது அறிவான செயல் அல்ல. ஒரு குடம் பாலில் ஒரு சிறு துளி விஷம் முழு பாலையும் நஞ்சாக்கி விடும்.

இன்றைய அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருக்கும் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ்கள் தமது சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட விளக்கம் தர முடியாத அறிவற்றவர்களாக இருக்கின்றனர். உலமா சபையின் ஹலால் பத்திரம் மக்களின் உணவை உண்பதற்கான உத்தரவாதமாகும். இது சிங்கள மக்களுக்கெதிரானதாக இருந்தால் அது பற்றி நீதி மன்றத்தில் முறையிட முடியும். அதனை விடுத்து அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழி இதனை இனவாதமாக்குவதை  தடுக்க அரசு முன்வர வேண்டும். 

பல்கலைக்கழகங்கள் பொது இடங்கள் என்பதால் அங்கு தீபம் ஏற்றியதை தவறு என கூறும் அரசாங்க தரப்பு பொது இடங்களில் இன்னொரு இனத்துக்கெதிராக போஸ்டர்கள் ஒட்டுவதை பார்த்துக்கொண்டிருப்பது நியாயமானமல்ல என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.