குருநாகலில் தொடர் மழை - பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின (படங்கள்)
(இக்பால் அலி)
தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் பல பிரதேசத்தில் இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குருநாகல் வில்கொட பிரதேசத்தில் லயன் வீடுகள் மூழ்கியுள்ளதை குருநால் மாநகர முதல் காமினிபெரமுனகே மற்றும் மாநாகர சபை உறுப்பினர் தியாகராஜா சென்று பார்வையிட்டனர் அவர்களை உடனடியாக குருநாகல் இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதோடு மூன்று நேர சாப்பாடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு 225 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் யாவரும் இன்று இந்துக் கல்லூரியில் தங்க வைப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டள்ளன.
கண்டி குருநாகல் வீதியில் பல இடங்களில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாய்ந்து செல்வதால் வாகனம் போக்குவரத்துக்கு மிகவும் சிரமானதாக உள்ளன.
மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் பண்டாரகல என்ற இடத்தில் சுமார் 15 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பறகஹதெனியாவிலிருந்து புசல்ல செல்லும் வீதியில் யாகெடுவ என்ற பாலத்திற்கு மேலால் வெள்ளம் பாய்ந்தோடுவதால் அங்கும் பல வீடுகள் நீரிழ் மூழ்கியுள்ளன.
Post a Comment