சகோதரி றிசானா விவகாரம் - நம்பிக்கைகள் தகர்ந்து போகுமா..?
(Gtn) குழந்தை ஒன்று உயிரிழந்தமை சம்பந்தமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த ரிஷான நபீக், இறந்த குழந்தையின் குடும்பத்தினர் பிடிவாத நோக்கில் காணப்படுவதாக என சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து திரும்பிய இலங்கை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ரிஷானவை விடுதலை செய்யும் முனைப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், அங்கு சென்ற சட்டமா அதிபர், அந்த நாட்டின் சட்டமா அதிபர், ஆளுநர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது, இறந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் இந்த விஷயத்தில் வெளியார் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
தனது விஜயத்தின் போது, ரிஷான நபிக்கை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Post a Comment