Header Ads



சோனக சமூகமே நீயும் இலங்கை மாதாவின் முதற் தர பிரஜையே. ..!



(ஸப்ரான் சலீம்)

இலங்கை மாதாவின் ஆதிக்குடிகளில் சோனக சமூகமும் ஒன்றாகும் என வரலாறு கூறுகின்றது. இந்த சோனக சமூகம் வரலாறு நெடுகிலும் தமக்கென உரிமைகள் பலபெற்று நாட்டின் ஆட்சியில் பல உயர் பீடங்களில் இடம் பதித்து வாழ்ந்த சமூகம். வரலாற்றில் சகல கட்டங்களிலும் இந் நாட்டுக்கு விசுவாசமாக வாழ்ந்த சமூகம். ஆனால் இச்சமூகத்தில் சிலர் இன்று தன்னை இரண்டாம் தர பிரஜையாக கருதி வாழ்கின்றமை கவலையான விடயம்.

சோனக சமூகம் எது என்று இன்றைய முஸ்லிம்கள் குறிப்பாக இளைய சமூகம் அறியாது, தெரிந்திராது உள்ளமை கவலையான விடயமே ஆகும். உலக முஸ்லிம் உம்மாவின் ஒரு பகுதியான இலங்கை வாழ் முஸ்லிம்கள் சோனகர்கள் என்ற தனிப் பெயரால் அழைக்கப்பட்டனர். இதற்கு இலங்கை நாட்டின் அரச, நிர்வாக பதிவுகள் பறைசாற்றி நிற்கின்றன. இவர்கள் தமெக்கென ஒரு மொழி , கலாச்சார விழுமியங்களை கொண்டிருந்திருந்தனர்.

இலங்கை நாட்டில் இச்சோனக சமூகம் அதாவது முஸ்லிம் சமூகம் தமக்கென எல்லா உரிமைகளையும், ஏனைய சமூகமங்களை விட சிறப்பான சில உரிமைகளையும் அரசியல் யாப்பு ரீதியாக பெற்றுள்ளமை நாம் அறிந்த விடயமாகும். நாம் இந்த நாட்டின் முதற் தர குடிகள் என்பதற்கு இது ஒன்றே போதிய சான்றாகும். எமது நாட்டில் ஒரு குடிமகனுக்கு பேச்சுரிமை , கருத்து தெரிவிக்கும் உரிமை , அனுமதிக்கப்பட்ட எவ்வியாபாரத்தையும் செய்யும் உரிமை , விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை , நாட்டில் விரும்பிய இடத்துக்கு பிரயானிக்கும் உரிமை இன்னும் ஏராளமான பல உரிமைகள் காணப்படுகிறதன. இதற்கு மேலதிகமாக ஒரு முஸ்லிம் தனக்கென முஸ்லிம் தனியார் சட்டம் என்ற அடிப்படையில் ( காணி , நிக்காஹ், இன்னும் பல ) தனித்துவமான உரிமைகளை பெற்றுள்ளான்.

ஆனால் எமது சமூகத்தில் சிலர் இது சிங்களவர்களது நாடு, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்  என்ற எண்ணத்தில் உள்ளதால், கிரிகட் போட்டி என்று வந்தால் எமது நாட்டுக்கு எதிராக செயற்படுவதால், எம்மை இந் நாட்டின் இரண்டாந் தர பிரஜை என்ற நிலைக்கு கொண்டு செல்கின்றது. எம்மில் பெரும்பாலரது தாய் மொழி தமிழாக இருக்கின்றது. ஆனால் எமது சமூகத்தில் தமிழ் பேசக்கூடிய சிலர் தாய் மொழி சிங்களம் என்ற எண்ணத்தில் உள்ளமை கவலையான விடயம்.

எம்மை ,எமது உரிமைகளை அடக்கி , ஒடுக்க நினைக்கும் , எம்மை வந்தேறுகுடிகள் என சித்தறிக்க நினைக்கும் இனவாத சக்திகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.

எமக்காக எமது முன்னோர்கள் அரசியல் யாப்பு ரீதியாக பெற்றுத் தந்துள்ள உரிமைகளை அறியாது இருப்பது கவலையான விடயம்.

எமது வரலாற்றையும் , உரிமைகளையும் அறியாது , தெரியாது வாழும் எம் சமூகத்தின் சிலர் எப்போது தான் கண் விழிப்பார்களோ........................?

எமது வரலாற்றையும் அரசியல் யாப்பில் உள்ள உரிமைகளையும், சட்ட திட்டங்களையும் அறிந்து கொள்வது எம் ஒவ்வொருவருடைய கடமையைகும்.



No comments

Powered by Blogger.