வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் - குழந்தைகளின் பால்மாவுக்கு தட்டுப்பாடு (படங்கள்)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா + ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் நானாட்டான் பிரிதேச செயலகப் பிரிவில் இடம் பெயர்ந்த மக்கள் அச்சாங்குளம் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் குறித்து கண்டறியவென கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் நேரில் சென்று கலந்துரையாடியுள்ளதுடன்,அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதேச செயலளார், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளார்.
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வங்காலை பகுதியிலும் வெள்ள நிலை காணப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான குடும்பங்களில் அதிகமான சிறுவர்கள் காணப்படுவதால் அவர்களுக்கு தேவையான பால் மாக்களே அதிகமாக தேவைப்படுவதாகவும், அவற்றை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், பால் மாக்களுக்கு தட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் கூறினார்.
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முன்வரும் அமைப்புக்கள் சிறுவர்களுக்கு தேவையான பால் மா உள்ளிட்ட பொருட்களை வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
Post a Comment