முஸ்லிம் கலவன் பாடசாலைகளை தனியாக பிரிப்பது ஒழுக்கம்பேண உதவும் - மௌலவி முபாறக்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
அந்நிய ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்வதை அல்குர்ஆனும் ஹதீசும் அங்கீகரிக்கவில்லை. இஸ்லாம் தெய்வீக மார்க்கம். அதுதான் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம். இஸ்லாம் கூறும் சட்டங்கள் அனைத்தும் மனிதர்களின் நலன்களுக்காகவே ஆக்கப்பட்டவை என்பதை விசுவாசிப்பது அவசியமாகும் என மௌலவி எம்.எல்.முபாறக் (மதனி) தெரிவித்தார்
மருதமுனையில் உள்ள பாடசாலைகளை ஆண் பெண் தனிப் பாடசாலைகளாக பிரிப்பது தொடாபில் அக்பர் ஜும்மா பள்ளிவாசலில் விசேட உரையாற்றிய போதே மௌலவி எம்.எல்.முபாறக் (மதனி) மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாடசாலைகளில் ஆண்களும் பெண்களும் கலந்து கல்வி கற்பதனால் மாணவர்களின் மார்க்க, ஒழுக்க, கல்வி விடயங்களில் பல மோசமான விளைவுகள் உண்டாவதை ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலேயே இன்று மேலைத்தேய நாடுகளிலும் கலவன் பாடசாலை முறையை குறைப்பது அல்லது முற்றாக ஒழிப்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமது நாட்டில் பெரும்பாலும் எல்லா கிராமங்களிலும், நகர்புறங்களிலும் மதபேதமில்லாமல் ஆண்கள் பாடசாலைகள் தனியாகவும் பெண்கள் பாடசாலைகள் தனியாகவும் இயங்கி வெற்றியடைந்து வரும் இக்காலகட்டத்தில் மார்க்க விடயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டும் முஸ்லிம் கிராமங்களில் அந்த முறை இல்லாமல் இருப்பது வேதனை தரும் அமசமாகும்.
எனவேதான் மருதமுனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை ஆண் பெண் பாடசாலைகளாக பிரிப்பதற்கான முயற்சிகளை மருதமுனை ஜம்இய்யதுல் உலமா பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே செய்து வருகின்றது. எனினும் விரும்பத்தகாத சில காரணங்களால் அம்முயற்சிகள் அவ்வப்போது தடைப்பட்டு வந்தன. இவ்வாறு இருக்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருதமுனை தவ்ஹீத் ஜமாஅத் இப்பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டு அதற்கான கள ஆய்வுகளைச் செய்துகொண்டிருக்கும்போது , மருதமுனை பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சம்மேளனம் உதயமாகி இப்பணியை முன்னெடுக்க விரும்பியபோது அதனுடன் இணைந்து தவ்ஹீத் ஜமாஅத்தும் செய்ற்பட்டு வந்தது. சம்மேளனத்தின் முயற்சி சற்று தொய்வடைந்தபோது மருதமுனை புத்திஜீவிகள் குழு ஒன்று இப்பணியை முன்னெடுக்கப் புறப்பட்டுள்ளது.
நிச்சயமாக இன்று உலகம் சந்கதிக்கின்ற பிரச்சினைகளில் ஒழுக்கப் பிரச்சினை மிக முக்கியமானது. யூதர்களால் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற ஒழுக்கச் சீர்கேடுகளில் நமது இளைய தலைமுறை அகப்படாமல் இருக்க நமது ஊரிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஆண் - பெண் பாடசாலை எனப் பிரிப்பது காலத்தின் தேவையும் மார்க்கக் கடமையுமாகும் என மௌலவி எம்.எல்.முபாறக் (மதனி) தெரிவித்தார்
Post a Comment