நாட்டில் மாவட்ட நீதிமன்ங்களின் செயற்பாடுகள் முடக்கம்
மாவட்ட மற்றும் நீதிமன்ற நீதிவான்களின் சந்திப்பு காரணமாக இன்றையதினம் நாட்டின் பெரும்பாலான நீதிமன்றங்களில் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்றங்களில் பதில் நீதிவான்கள் விசாரணைகளை முன்னெடுத்தமை காரணமாக அதிகளவான வழக்கு விசாரணைகள் தாமதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றையதினம் இடம்பெறும் சந்திப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் என நேற்றைய தினம் நீதியமைச்சு அறிக்கையொன்றின் மூலம் அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
குறிப்பாக, அதிக வழக்குகளை கொண்ட அநுராதபுரம், பதுளை, மாத்தறை, உள்ளிட்ட நீதிமன்றங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
Post a Comment