Header Ads



அக்குறணையில் வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு உதவி - மூவின மக்களும் பங்கேற்பு


(ஜே.எம்.ஹபீஸ்)

அக்குறணைப்  பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த சீரற்ற கால நிலை காரணமாக தமது வீடுகளை இழந்து நிர்கதி நிலைக்குள்ளான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வங்கப்பட்டன.

தமது சொந்த இடங்களில் இருந்து இடம் பெயர்ந்த  50 குடும்பங்களுக்கு அக்குறணை ஜம்மியதுல் உலமா சபையின் மூலம் உலர் உணவு வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

அக்குறணை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மவ்லவி எம்.ஏ.எம். சியாம் தலமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்  அக்குறணைப் பிரதேசத்தை சேர்ந்த தமிழ், சிங்கள, மற்றும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இதன் மூலம் பயன் அடைந்தனர். 
அக்குறணை பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபீர் உற்பட அக்குறணை டவுன் ஜம்மியதுல் உலமாசபையின்; உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.