பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமையால் சிங்கள இனம் அழிந்து வருகிறது - நாபான பேமசிறி தேரர்
சிங்கள பௌத்த குடும்பங்கள் பிள்ளை பெற்று கொள்வதில்லை என்பதால், எதிர்காலத்தில், பௌத்த பிக்குகளை உருவாக்கவும் பிள்ளைகள் இருக்க மாட்டார்கள் என ராமஞ்ஞிய மஹா நிக்காயவின் தலைவர் நாபான பேமசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களின் தூரநோக்க செயற்பாடுகள் காரணமாக பௌத்த சிங்கள இனம் விரைவில் அழிந்து போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய எவரும் கவனம் செலுத்துவதில்லை. நிலைமை இவ்வாறு சென்றால், புத்தசாசனத்தில் பெரும் சீர்கேடு ஏற்படும் எனவும் தேரர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேரரை சந்தித்து ஆசிப்பெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார். உலகத்தின் அழிவு பற்றி அனைவரும் பேசுகின்றனர். பௌத்த தர்மத்தை பின்பற்றுவோர் இவ்வாறான உலக அழிவை குறித்து நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். உலக அழிவு எப்படி இருந்த போதிலும் சிங்கள பௌத்தர்களின் அழிவு நெருங்கியுள்ளது. வேற்று மதத்தவர்கள் தமது பிள்ளைகளை பௌத்த துறவிகளாக்க மாட்டார்கள்.
வேற்று கிரகங்களில் இருந்து வந்து, தாக்குதல் நடத்துவதால், இந்த உலகம் அழிய போவதில்லை. மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக மனிதர்களாலேயே இந்த உலகம் அழிந்து போகும். உலகத்தின் வளர்ச்சி நல்லதை நோக்கி பயணிக்கவில்லை. தற்போது அறிவு அழிவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது எனவும் நாபான பேமசிறி தேரர் கூறியுள்ளார். gtn
oosi soru thinge pansalikku poi kaliyanam mudikkame iruntha eppedi sanam peruhire.
ReplyDeleteeppadi ippadi yellam
ReplyDeleteபௌத்தம் பற்றி தெரிந்த வேற்று மதத்தினா்களுக்கு மட்டுமே இதுபுரியும். ஏனென்றால் பௌத்தம் ஒருமதமன்று.அதில் எங்கும் வணக்கமுறையொன்று கிடையாது. 2560 வருடம் பழைமைவாய்ந்த ஒரு தத்துவ போதனை. திருக்குரல் போன்று நல்ல பல வாழ்வியல் கருத்துக்கள் உண்டு.ஆனால் வணக்கமோ வழிபாடோ கிடையா. இந்துக்களின் கோவில்களும் இந்து குருமாறும் இருக்கும்வரை ஏதோ நடக்கும். போகும் போக்கைப் பார்த்தால் இன்னும் 10 அல்லது 15 வருடத்தில் அரச மரத்தோட்டம் அல்லது அரசமரக்காடுகள் மட்டுமே இலங்கையில் இருக்கும்.
ReplyDelete