குர்பான் தோல்களை விற்று பணம் சேகரித்துள்ள போராளி அமைப்புக்கள்
பாகிஸ்தானில் இயங்கிவரும் அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால், பக்ரீத் பண்டிகை காலத்தில் குர்பானி கொடுக்கப்படும் ஆடு, மாடுகளின் தோல்களை மக்களிடமிருந்து பெற்று, அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை போராளி அமைப்புகள் சேகரித்து வருகின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகான அரசு, கடந்த அக்டோபர் மாதம் போராளிகளுக்கு குர்பானி தோல்களை தரக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. இந்த தடையையும் மீறி, ஜமாத்-உட்-தாவா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகள், அப்பகுதி மக்களிடமிருந்து 92 ஆயிரத்து 800 தோல்களை சேகரித்துள்ளன. இவற்றை 78 கோடியே 2 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர் என பாகிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
Post a Comment