நாட்டு முஸ்லிம்கள் சவால்களிலிருந்து மீட்சிபெற தமது அறிவுக்கண்களை திறக்கவேண்டும்
(M.H.Ahamed Roomy)
முஸ்லிம்கள் இன்று இலங்கையில் பல்வேறு சவால்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதிலிருந்து மீட்சிபெறுவதற்கு முஸ்லிம்கள் தமது அறிவுக்கண்களை திற்க்கவேண்டுமென மேல்மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் அம்ஜாத் பேருவளை மஹகொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
ILM Welfare Centre இனால் மஹகொடை ஐ.எல்.எம். ஸம்ஸுதீன் வித்தியாலயத்தில் இலவசமாக அப்பியாசப் புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ILM Welfare Centre இன் தலைவர் அஹமத் ரூமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐ.எல்.எம். ஸம்ஸுதீன் வித்தியாலய அதிபர் முஹம்மத் ஸுபைர் கௌரவ அதிதியாக கலந்துசிறப்பித்தார்.
அவர் தனது உரையில் ILM Welfare Centre பாடசாலை அபிவிருத்திச் சஙகத்தோடும், பழைய மாணவர் சங்கத்தோடும் இணைந்து பாடசாலையும், சமூகமும் மறுமலர்ச்சிப்பாதையில் செல்ல ஒத்துழைப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கின்றமை பாடசாலையின் ஒளிமயமான எதிர்காலத்தை படம்பிடித்துக்காட்டுகின்றதென தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுமார் 50 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
Post a Comment