சட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர்கள் தெரிவு - ஜனாதிபதிக்கு முறைப்பாடு
சட்ட கல்லூரியில் மாணவர்களை உள்வாங்குவதற்கான சட்ட நுழைவு அனுமதி பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக என ஆராயும்படி பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியிடமும், கல்வி அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று 24-12-2012 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் இந்த விடயத்தை வெளியிட்டார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருட நுழைவு அனுமதி பரீட்சையில் அதிக அளவிலான முஸ்லீம்கள் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு ஐந்து பேரும், 2004 மூன்று பேரும், 2005ஆம் ஆண்டு 7 பேரும் இந்த பரீட்சைக்கு தோற்றினர். 2011ஆம் ஆண்டு இந்த தொகை 52 ஆக உயர்ந்திருந்தது. இந்த வருடத்தில் தெரிவான மாணவர்கள் 309 பேரில், 78 பேர் முஸ்லீம்கள். இந்த தொகை அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. இதன் மூலம் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 1 தசம் 4 வீதத்தால் குறைவடைந்துள்ளது. தொகை அதிகரித்தாலும் அது சிங்கள மாணவர்களை பாதிப்பதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக முஸ்லீம்களின் எண்ணிக்கை 18 தசம் 8 சத வீதத்தால் சராசரியாக அதிகரித்துள்ளது.
Post a Comment