Header Ads



செயற்கை உறுப்பு தயாரிக்கும் வேலைத்திட்டம் - இலங்கைக்கு உதவியது ஜப்பான்


செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் வேலைத்தளங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான இயந்திரங்கள் கொள்வனவிற்கு ஜப்பானிய அரசாங்கம் சுமார் 3.7 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் சமூக நலன்புரி செயற்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
  
இதன்மூலம் வருடந்தோறும் சுமார் 1000 பேருக்கு இலவசமாக செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுகின்றனர். இந்த உதவியின் ஊடாக இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு அதிகரிக்கும் என ஜப்பான் நம்புகின்றது.

No comments

Powered by Blogger.