Header Ads



நல்ல விசயம்...!


வெளிநாட்டு வேலைவாய்பு பெற்று செல்லும் இலங்கை ஆண்களின் எண்ணிக்கை, பெண்களின் எண்ணிக்கையினை விட அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முப்பது வருட காலத்திற்குப் பின்னர் இந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் அமால் சேனலங்காதிகர தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச் செல்லும் ஆண்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்துவதில் பணியகம் ஆர்வமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக பாரசீக குடாநாடுகளுக்கு செல்வதன் மூலம், இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தினர் சமூக பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த கிராமபுற ஆண்களை வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்று செல்வதற்கு ஏற்ற வகையில், பல்வேறு வேலைத் திட்டங்களை தமது பணியகம் மேற்கொண்டு வருவதாக, பணியகத்தின் தலைவர் அமால் சேனலங்காதிகர தெரிவித்துள்ளார். sfm

No comments

Powered by Blogger.