தல்கஸ்பிடி ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் வீதிக்கு கொங்கிரீட் (படங்கள்)
(இக்பால் அலி)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் மூலம் ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவில் தல்கஸ்பிடி ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியை கொங்கிரீட் இட்டு செப்பனிடும் பணிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இவ் வேலைத்திட்டத்தினை வேண்டுகோளாக முன்வைத்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார், அதில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Post a Comment