Header Ads



இலங்கையிலிருந்து அரபு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோருக்கு விசேட தொலைபேசி


மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்கு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு விசேட கையடக்க தொலைபேசி இணைப்பொன்றை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு புதியத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

இதனைத்தவிர வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பணியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பு அற்றுபோகும் சந்தர்ப்பங்களிலேயே அதிகளவான பிரச்சினை ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது.

விசேட சலுகை கட்டணங்களுடன் கூடிய இத்தகைய கையடக்க தொலைபேசி இணைப்பை வழங்கும் முதலாவது ஆசிய நாடு என்ற பெருமை இலங்கைக்கு உரித்தாகும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றுக்கு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு புதிய தொலைபேசி இணைப்புக்கான சிம் அட்டை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

1 comment:

  1. இந்த மாதிரியான நல்ல திட்டங்கள் வந்தால் புதிதாக வெளிநாடு செல்வோருக்கு மிகவும் வசதியாக இருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் இதை பிரசுரித்த JAFFNA MUSLIM இனணயத்துக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete

Powered by Blogger.