Header Ads



எங்களின் உள்விவகாரங்களில் தலையிடாதே - முஸ்லிம் நாடுகள் ஈரானிடம் கோரிக்கை



(தூது)

தங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை உடனடியாக ஈரான் நிறுத்த வேண்டும் என்று ஜி.சி.சி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் சிரியாவில் கூட்டுப்படுகொலைகளும், சர்வதேச சட்டங்கள் மீறப்படுவதையும் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜி.சி.சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

பஹ்ரைன் நாட்டு தலைநகர் மனாமாவில் 2 தினங்களாக நடந்த ஜி.சி.சி உச்சிமாநாட்டின் இறுதியில் தலைவர்கள் இக்கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஷியாக்களின் தலைமையில் பஹ்ரைனில் நடக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு நெருப்பு மூட்டும் ஈரானின் முயற்சிகளை குற்றம் சாட்டிய ஜி.சி.சி தலைவர்கள், பஹ்ரைன் அரசுக்கு பூரண ஆதரவை தெரிவித்தனர். வளைகுடா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தொடர்ச்சியாக தலையிட்டு
 வருகிறது.

இந்நடவடிக்கையில் இருந்து ஈரான் உடனடியாக விலகவேண்டும். பிராந்தியத்தில் ஈரானி நடவடிக்கை பிரச்சனைகளை அதிகரிக்கவும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது என்று ஜி.சி.சி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். வளைகுடா நாடுகளுக்கு சொந்தமான தீவுகளில் ஈரான் நடத்தும் ஆக்கிரமிப்புகளையும் சவூதி அரேபியா, பஹ்ரனின், யு.ஏ.இ, குவைத், ஒமான், கத்தர் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி.சி.சி கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.