இலங்கையருக்கு அபுதாபியில் தூக்கு தண்டனை
(tm) கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு அபுதாபியில் நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த அலெக்ஸ் ரோஹன (வயது 36) என்பருக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் மூலமே இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதவான், பொது வழக்கறிஞர், இமாம், வைத்தியர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் இவருக்கு நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபுதாபியில் பொறியியலாளர் ஒருவரை குறித்த இலங்கையர் 2002ஆம் ஆண்டு கொலை செய்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 8 பிள்ளைகளின் தந்தையான ஒபைட் அல் முஹாரி (வயது 39) என்பவரையே குறித்த இலங்கையர் குத்திக் கொலை செய்துள்ளார்.
Post a Comment