முஹம்மது நபி (ஸல்) பற்றிய நகைச்சுவை புத்தகம் - முஸ்லிம்கள் கவலை
முஸ்லிம்களின் இறைத்தூதரான முகமது நபியை குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய கார்டூன்களை வெளியிட்டு முஸ்லிம்களின் கோபத்திற்குள்ளான பிரெஞ்சு பத்திரிகை, முகமது நபி குறித்து நகைச்சுவை புத்தகம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
பிரான்சிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ எனும் வார இதழ் கருத்துரிமை பாதுகாப்பு எனும் பெயரில் ஏற்கனவே முஸ்லிகளின் தூதரான முகமது நபியை குறித்து சர்ச்சைக்குரிய கார்டூன்களை வெளியிட்டு முஸ்லீம்களின் கோபத்திற்கு உள்ளாகியது.
இந்நிலையில் சார்லி ஹெப்டோ இதழின் பதிப்பாளர் சார்ப்,முஸ்லிம்களின் தலைவர் முகமது நபியை குறித்து தாம் நகைச்சுவை புத்தகம் வெளியிட போவதாகவும் அப்புத்தகம் பிரான்சை சார்ந்த ஜெனப் எனும் முஸ்லிமால் மேற்பார்வையிடப்பட்ட புத்தகம் என்பதால் இஸ்லாத்தை குறித்த அதிகாரபூர்வ புத்தகமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
வரும் ஜனவரி 2ம் தேதி அன்று அப்புத்தகத்தை வெளியிட போவதாகவும் 2006ல் டென்மார்க் பத்திரிகை ஒன்று முகமது நபி குறித்து கார்டூன்களை வெளியிட்ட போது எழுந்த எதிர்ப்புகளே தம்மை இப்புத்தகம் போட வைத்ததாகவும் சார்பி கூறினார். இயேசுவை குறித்து இவ்வுலகம் அறிந்தது போல் முகமதுவை குறித்து இவ்வுலகம் அறியவில்லை என்றும் கூறினார்.
முகமது நபியை இழிவுபடுத்தி இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் எனும் திரைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்ட போது உலகெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்த போது அப்போராட்டங்களை கிண்டல் செய்யும் விதமாக சார்பி, முகமது நபி நிர்வாண கார்டூன்களை வெளியிட்டவர் என்பதால் வெளி வர உள்ள நகைச்சுவை புத்தகம் மீண்டும் இன்னொரு கலவரத்தை தூண்டக் கூடும் என்று பிரான்ஸின் முஸ்லிம் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. inneram
Post a Comment