மன்னாரில் மீண்டும் அடை மழை - பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
நேற்று மாலை முதல் மன்னாரில் மீண்டும் பெய்து வரும் அடை மழை காரணமாக தலைமன்னார் பிரதேசத்தில் பல கிராமங்கள் மூழ்கியதுடன்,b400 குடும்பங்கள் வரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டென்லி டிமெல் தெரிவித்தார்.
நேற்று மாலை பெய்த மழையினால் மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம்,கட்டுக்காரன் குடியிறுப்பு,துள்ளுக் குடியிறுப்பு,கீளியன்குடியிறுப்பு ஆகிய பிரதேசங்களே வெள்ள நீரினால் நிரம்பி காணப்படுவதாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய அம்மக்களுக்கான நிவாணரப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இரவு 10 மணியளவில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தமையினால் அம்மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டதாகவும்,அவ்விடத்துக்கு விஜயம் செய்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கச் செய்ய போதுமான முயற்சிகளை முன்னெடுத்ததாகவும்,அமைச்சரின் பிரத்தியேக செயலளார் றிப்கான் பதியுதீன் கூறினார்
Post a Comment