Header Ads



இறுதி தெரிவே ஈரான் மீது யுத்தம் - அமெரிக்கா கூறுகிறது


அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் தீர்மானித்திருப்பது, அந்நாட்டுக்கு ஆபத்தானதாக இருக்கும். அதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடைசித் தெரிவாகத்தான் போர் நடவடிக்கை இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதுபற்றி,அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பானெட்டா கூறியதாவது,,

 ஈரான் விஷயமாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குறிக்கோளுடன் கூடிய ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை இரு நாடுகளுமே விரும்பவில்லை. அமெரிக்கா ஏற்கெனவே தனது நிலையை தெளிவுபடுத்தி விட்டது. அதேபோல, இஸ்ரேலும் தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டது. தற்போதுள்ள கேள்வி என்னவெனில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட வேண்டாமென்று ஈரானை இரு நாடுகளும் எப்படி வலியுறுத்துவது என்பது தான்.

இந்த விஷயத்தில், சர்வதேச சமுதாயமும் ஒன்று சேர்ந்துள்ளன. ஈரான் தனது அணுசக்தி திறனை வளர்க்கும் முயற்சியை தொடருமானால், அதற்கு தண்டனையாக பொருளாதார நெருக்கடி, தூதரக ரீதியிலான, ராஜரீதியிலான நெருக்கடிகளை அளிக்க சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. ஈரான் விஷயத்தை கையாளும்போது, அந்நாட்டின் மீது போர் தொடுப்பதை கடைசி முயற்சியாகத் தான் வைத்துக்கொள்ள வேண்டும்; தொடக்கத்திலேயே சண்டை கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் கூட கூறியுள்ளார். 

எனவே, ஈரான் விஷயத்தில் அனைத்து வகையான வாய்ப்புகளும் அந்நாட்டுக்கு அளிக்கப்படும். எந்தவொரு முயற்சியும் கைவிடப்படமாட்டாது. இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு ஏற்படும் என்றே நம்புகிறோம். அதே சமயத்தில், அணுஆயுதங்கள் தயாரிப்பதை ஈரான் நிறுத்திக்கொள்ளவில்லை எனில், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்பதையும் தெரிவிக்கிறேன் என்றார், லியோன்.

No comments

Powered by Blogger.