வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்கும் நவீன டெலஸ்கோப் - இங்கிலாந்து விஞ்ஞானிகள்
பூமியில் வேற்று கிரகவாசிகள் உலவுவதாக அவ்வப்போது வதந்திகள் பரவுகின்றன. எனவே அவர்களை கண்டுபிடிக்க அதிக சக்தி வாய்ந்த சூப்பர் பவர் ரேடியோ டெலஸ்கோப்பை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ‘ஸ்கொயர் கிலோ மீட்டர் அர்ரே’ (எஸ்.கே.ஏ.) என பெயரிட்டுள்ளனர்.
இது பூமியின் மேற்பரப்பில் 4,921 சதுர கிலோ மீட்டர் தூரம் கண்காணிக்க கூடியது. அதில் இருந்து வெளியாகும் ஆயிரக்கணக்கான ரேடியோ அலைகள் வேற்று கிரகவாசிகள் பூமியில் ஊடுருவினால் இந்த டெலஸ்கோப் மூலம் காட்டிக் கொடுத்து விடும். இதன் பணி 2016-ம் ஆண்டு தொடங்கும்.
அதை தொடர்ந்து 2024-ம் ஆண்டில் அதாவது இன்னும் 12 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகள் பற்றிய உண்மை தகவல்கள் உலக மக்களுக்கு தெரிய வரும். இந்த தகவலை இங்கிலாந்து மந்திரி நிக் போப் தெரிவித்துள்ளார்.
இந்த சூப்பர் பவர் ரேடியோ டெலஸ்கோப் மற்றவைகளைவிட 10 ஆயிரம் மடங்கு கூடுதல் சக்தி வாய்ந்தது. 50 மடங்குக்கு மேலாக நுண்ணிப்பாக கண்காணிக்கும் திறன் கொண்டது. இது சுமார் ரூ. 27 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment