முஸ்லிம் எம்.பி.க்களுடன் முஸ்லிம் கவுன்சிலும், உலமா சபையும் முக்கிய சந்திப்பு
முஸ்லிம் சமூகம் அண்மைய காலங்களில் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலும் இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சிங்கள கடும்போக்காளர்களின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டு, இந்த நெருக்கடிநிலை குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் உடனடியாக ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்டத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் எம்.பி.க்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் அகில இலங்கை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், முஸ்லிம் கவுன்சிலும் இணைந்து முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக இதன்போது முஸ்லிம் எம்.பி.க்கள் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
Post a Comment