கொழும்பில் ஜே.வி.பி. விநியோகித்த துண்டுப்பிரசுரம் (படங்கள்)
நமது பேரன்புக்குரிய தாயகமும் அதில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலே, பர்கர் உள்ளிட்ட அனைவரும் தற்போதய பாரிய சமூக பொருளாதார அரசியல் நெருக்கடியின் பாதக விளைவுகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சியடைந்து வருகின்ற இந்த நெருக்கடிகளால் பொது மக்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு புறத்தில் விலவாசிகள் விண்ணை நோக்கி உயர்வதாலும், சம்பளம் அதிகரிக்கப்படாததன் காரணத்தினால், போதிய வருமானமின்றி பொது மக்கள் பெரும் பொருளாதார பிரச்சினைகளுக்கும் சிரமங்களுக்கும உள்ளாகியுள்ளனர். மறுபுறத்தில் பொருளாதாரத்தை பல்தேசிய நிறுவனங்களால் விழுங்கவதற்கு இடமளித்திருப்பதினால் உள்ளுர் உற்பத்தியாளர்களும் அவர்களது உற்பத்தி முயற்ச்சிகளும் சீரழிந்து வருகிறது. அதேபோன்று ஜனநாயகத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி நீத்துறையின் மீதும் கைவைக்கப்பட்டிருக்குபோது, மனித உரிமை பிரச்சினை மற்றும் அல்ல பிற்போக்குவாதிகளுக்கே சென்றடையும். அதன்மூலம் உணமையான பிரச்சினைகளை மறக்கடிக்கப்படுவதன் மூலம் அவைகளின் உண்மையான பிரதிவாதிகள் பாதுகாகப்படுவதாகவே அமையும்.
அதனால் மக்கள் மத்தியில் ஒற்றுமையை சிதைக்கின்ற, மதவாத அல்லது இனவாத மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் வழிசமைக்கின்ற, ஏகாதிபத்தியச் சக்திகள் மற்றும் பிற்போக்குவாதிகளுக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்துகின்ற எந்த வகையான இன ரீதியான மதரீதியான, இனவாத தீவிரவாதத்திற்கு இறையாhமல் இருப்பதற்கும் அவைகளை தோற்கடித்து சகல மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக நாம் செயற்பட்டாக வேண்டும்.
மூன்று தசாப்பங்களுக்கு மேல் இனவாத பிரிவினைவாத யுத்தத்தால் அழிவடைந்திருக்கும் மக்கள் என்ற வகையில் இனியும் அதே வகையான கலவரங்களுக்கு இடமளிக்காது, உணர்ச்சி வசப்பட்டல்ல புத்தியால் சிந்தித்து, மக்கள் முகம் கொடுக்கும் உண்மையான சவால்களை இனங்கண்டு அவைகளை வெற்றிக் கொள்வதற்காகவும், அதற்காக மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவும் உயிரோட்டத்துடன் பங்கிளிப்புச் செய்யும்படி நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கா, மலே மற்றும் பௌத்த, இந்து, இஸ்லாம், கிருஸ்த்துவ கத்தோலிக்க உட்பட அனைத்து இலங்கைவாழ் மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
மக்கள் விடுதலை முன்னணி
' சகலவிதமான இனவாதத்தையும் தோற்கடிப்போம்!
' சகல வகையாக மத தீவிரவாதத்தையும் தோற்கடிப்போம்!
' சகல மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்!
Post a Comment