Header Ads



ஸலாத்திற்கு பதில் சொல்லாதவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு...!


(இந்நேரம்) தான் தெரிவித்த 'ஸலாம்'- முகமனுக்குப் பதிலளிக்கவில்லை என்று அரசு ஊழியர் ஒருவர் மீது ஜெத்தா நகர பிரஜை ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார்.  இத்தகவலை சவூதி அரேபியாவின் அல்ஹயாத் நாளேடு வெளியிட்டுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மனுதாரரின்  வழக்குரைஞர் அப்துல் அஸீஸ் அல் ஸாமில்  

"குறிப்பிட்ட ஒருநாளன்று அந்த அரசு ஊழியரின் அலுவலகத்திற்குச் சென்ற மனுதாரர் சலாம் உரைத்த போது பதிலுரைக்காமல் இருந்தார். சவூதி அரேபிய சட்டப்படி, அரசு ஊழியர் என்பவர் நல்ல குணாம்சங்களோடு நன்னடத்தைக்குரியவராக இருக்கவேண்டும் - இது சட்ட விதி நான்கிற்கு உட்பட்டது" என்றார். மேலும், "இஸ்லாம் மத ஆசாரப்படி, சலாமுக்கு பதில் சலாம் உரைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் அதன்படி நடக்கவில்லை" என்றும் வழக்குரைஞர் அப்துல் அஸீஸ் அல் ஸாமில் கூறினார்.

சலாமுக்கு பதிலுரைக்காத விடயம் சவூதி அரேபியாவில் அரிதே என்றாலும் இவ்வழக்கில் அந்த அரசு ஊழியருக்கு ஷரியா சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வழக்குரைஞர் அல்ஸாமில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வது அரசு ஊழியர்களின் இயல்பாக இருக்க வேண்டும்" என்றார் அல்ஸாமில்.


No comments

Powered by Blogger.