Header Ads



மருதமுனையில் சூடுபிடிக்கும் ஆண்-பெண் பாடசாலை பிரிப்பு விவகாரம்..!


(ஜெஸ்மி எம்.மூஸா, வஸீம் ஹுஸைன்) 

மருதமுனை தனியான ஆண் - பெண் பாடசாலைகளின் உருவாக்கம் தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்புக்களும் பிரகடனங்களும் நடந்தவண்ணமுள்ளன.

மருதமுனை தஃவா அமைப்புக்கள் மற்றும் அனைத்துப் பள்ளிவாயல்களின் சம்மேளனம்  மக நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் தனியான ஆண்-பெண் பாடசாலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானமொன்றை வியாழக்கிழமை (27)அறிவித்தது.

இதன்படி மருதமுனையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து அல்மனார் மத்திய கல்லூரி, அல் மதீனா வித்தியாலயம், ஆகியன ஆண் பாடசாலைகளாகவும், ஷம்ஸ் மத்திய கல்லூரி , அல்ஹம்றா வித்தியாலயம் , புலவர் மணி ஷரிபுத்தின் வித்தியாலயம் ஆகியன தனியான பெண் பாடசாலைகளாகவும் பாண்டிருப்பு மினன் வித்தியாலயம்,அக்பர் வித்தியாலயம் என்பன 1-5 வரையிலான ஆரம்ப பாடசாலைகளாகவும்  இயங்கவேண்டும் என அனைத்து இயக்கங்களின் சம்மேளனம்  துண்டுப் பிரசுரம், மற்றும்  ஒலி பெருக்கி மூலம் அறிவித்ததுடன்  வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பிரகடனம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து இயக்கங்களின் சார்பில் பிரகடனத்தை கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம்.எச்ஏ. ஜெலில் வாசித்ததுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி வடிகால்அமைச்சின் செயலாளர் ஏ.எச்,எம் அன்ஸார் சிறப்புரையொன்றையும் ஆற்றினார்.

அனைத்து இயக்கங்களின் அறிவித்தல்களும் செயற்பாடுகளும் நூற்றாண்டு விழாக் காணும் அல்மனாரின் கருத்துக்களுக்கு இசைவானதல்ல. இதன் மூலம் அல்மனாரின் கல்வி பாதிப்படையும்.  இக் கல்லூரியை சிதைவடையச் செய்ய திரைமறைவில் மேற் கொள்ளும் நாசகாரச் செயல்களே இவை எனத் தெரிவித்து அல்மனார் சமுகத்தினரும் கூட்டங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அல்மனார் அதிபர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் கூடிய அல்மனாரின் நலன் விரும்பிகள், அனைத்து இயக்கங்களின் முடிவினை நிராகரித்ததுடன் தாம் இஸ்லாமிய அடைப்படையிலான ஆண்-பெணட பிரிபட்புக்கு ஆதரவு வழங்குகிறோம். அப்பிரிப்பானது அல்மனாரின் எதிர்கால நலனை  கவனத்தில் கொண்டு  உள்ளக ரீதியாக பிரிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதற்கான அங்கிகாரத்தையும் வழங்கியுள்ளனர்.

இவ் அங்கிகாரத்தின் படி அல்மனாரின் தற்போதய மேற்பிரிவு ஆணாகவும், ஆரம்பப் பிரிவு பெண்ணாகவும் மாறி எதிர்வரும் ஜனவரி முதல் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான இசட்,எச்.ஏ  றஹ்மான், ஏ.ஆர் அமீர் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.பீ்.எம், அம்ஜத், ஈஸ்டன் விழையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எல்.எம். ஜமால்தீன் உட்பட பலர் உரையாற்றினர்.

அல்மனாரின் கருத்ததுக்களுக்கு மாற்றமாக பொதுமக்களை குழப்பும் நடவடிக்கைகளில் சிலர் செயற்படுவதாக கூறி கல்முனைப் பொலிஸில் முறைப்பாடென்றை செய்யப்பட்டு அதற்கான விசாரணையொன்றும் நடைபெற்றுள்ளது. 

No comments

Powered by Blogger.