Header Ads



வீட்டை பாதுகாக்க பொம்மை - இங்கிலாந்தில் அதிரடி திட்டம்



வீட்டை பூட்டி கொண்டு வெளியூர் செல்பவர்கள் நிம்மதியுடன் திரும்ப புதிய யுக்தி ஒன்றை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லோம் பெல்கிஸ் என்பவர் கண்டுபிடித்துள்ளார். புதையலை பூதம் காக்கிறது என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோல வீட்டின் தோட்டத்தில் சிறிய பொம்மை வைக்கப்படும். 

இதில் நுண்ணிய திறன்மிக்க கேமரா பொருத்தி 'வயர்லெஸ் சென்சார்' மூலம் ஆய்வு செய்து அது வீட்டின் உரிமையாளரின் இருப்பிடம் முகவரிக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இதை அவர் தனது கம்யூட்டர், லேப்டாப் மூலமோ அல்லது செல்போன் மூலமோ காண முடியும்.

கொள்ளை, திருட்டு முயற்சியில் இறங்க யாராவது வீட்டிற்குள் நுழைந்தால் அதுபற்றி இதன் மூலம் கண்காணித்து உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க இயலும். இந்த புதிய கண்டுபிடிப்பை தற்போது பரிசோதனை செய்து பார்க்கிறார்கள். 

அது வெற்றி பெற்றவுடன் வர்த்தக ரீதியில் அடுத்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.