Header Ads



குவைத்தில் ஷியா கூட்டம் எழுச்சி பெறுகிறதா..?


குவைத் நாட்டில், 50 இடங்களுக்கான, பார்லிமென்ட் தேர்தல், 01-12-2012 நடந்தது. ஆளும் கட்சி எம்.பி.,க்களுக்கு ஏற்ப, விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்தலை புறக்கணித்தனர். இதனால், இந்தத் தேர்தலில் குறைந்த பட்ச ஓட்டுக்களே பதிவாயின. குவைத்தில் ஷியா பிரிவு  மைனாரிட்டிகளாக உள்ளனர். எதிர்க்கட்சியினரின் புறக்கணிப்பால், பார்லிமென்ட்டுக்கு, ஷியா பிரிவைச் சேர்ந்த, 15 எம்.பி.,க்கள் தேர்வாகி உள்ளனர். மூன்று பெண்களும், எம்.பி.,க்களாகி உள்ளனர்.

"எதிர்க்கட்சியினர் பங்கேற்பு இல்லாமல் நடந்த இந்தத் தேர்தல், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது' என, எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தத் தேர்தலில், 26 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக எதிர்க்கட்சி தரப்பிலும், 39 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.குவைத்தில், இந்த ஆண்டில், இரண்டாவது முறையாக பார்லிமென்ட் தேர்தல் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் ஒரு முறை தேர்தல் நடந்தது. 

1 comment:

  1. முஸ்லிம்களின் மூன்றாவது எதிரி ஷீஆக்கள்,இஸ்லாமிய ஆட்சி எனும் ஒரு மந்திரத்தை ஜபித்துக்கொண்டே முஸ்லிம்களுக்குள் ஊடுருவி பிளவுகளையும் ,பிரச்சினைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அதிபயங்கரவாதி.அது மட்டுமல்ல இன்று இஸ்ரவேல் மற்றும் மேற்குலகின் அதிபயங்கர கூட்டாளியும் இவனே.

    ReplyDelete

Powered by Blogger.