Header Ads



நீதிமன்றத்திற்கு வரும்போது முகம்மூடும் பர்தா அணியலாம் - கனடா நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணியலாம் என்று கனடிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அண்மையில் ஒரு முஸ்லிம் பெண் கண்கள் மட்டும் தெரியக் கூடிய பர்தா உடையை அணிந்து வர அனுமதி கேட்டார். முஸ்லிம்  பெண்கள் பொது இடத்துக்கோ அல்லது ஆண்கள் இருக்கும் இடத்துக்கோ வரும்போது முழுவதும் மூடிய உடையை அணிந்து இருக்க வேண்டும் அதனால் தன்னை அந்த உடை அணிய அனுமதிக்குமாறு கோரினார். 

இந்நிலையிலேயே கனடா உச்ச நீதிமன்றம் முஸ்லிம் பெண்கள், பர்தா அணியலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

கனடிய =உரிமைகளின்படி பர்தா அணிவது தனி மனித உரிமை. ஆனால் குடியுரிமை சட்ட விதிகளின் படி குடிமகனாக பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது முகத்தை மூடியிருக்கக் கூடாது எனவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.