Header Ads



தேசிய மட்டத்தில் ஜொலிக்கும் முஸ்லிம் வீரர்கள் - நமது சமூகம் கைகொடுக்குமா..??



38 ஆவது தேசிய விளையாட்டு விழா போட்டிகள் அண்மையில் நடந்து முடிந்துள்ளன. இப்போட்டியில் 2 முஸ்லிம் வீரர்கள் தங்கப்பதக்கம் பெற்று முஸ்லிம் சமூகத்திற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளனர். 

தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெலிகமயைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.சப்ரான் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளதுடன், மூன்றாம் இடத்தை ஏ.ஏல்.எம்.அஷ்ரப் (கிழக்கு மாகாணம்) மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

100 m (Men)

 1) M.S.M Safran (Southern Province) – 10.64sec, 2) A. Hasaranga (Southern Province) – 10.71sec, 3) A.L.M Ashraff (Eastern Province) – 10.75sec


அத்துடன் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.ஆர்.எம்.ரஜாக்கான முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

200 m (Men)

 1) A.R.M Rajaskhan (Eastern Province) – 21.37sec, 2) A.S Pathirana (Central Province) – 21.37sec, 3) R. Jayawardane (Western Province) – 21.78sec


இலங்கை தேசியமட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள  இம்மூன்று முஸ்லிம் சகோதரர்களுக்கும்,   போட்டிகளில் பங்கேற்ற ஏனைய முஸ்லிம் சகோதரர்களுக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்களை வழங்குகிறோம்.. அவர்கள் தொடர்ந்தும் எமது நாட்டுக்கும், எமது முஸ்லிம் சமூகத்திற்கும் பெருமை தேடி தருவதுடன், எதிர்காலங்களில் அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவிக்கவும் பிரார்த்திக்கிறோம்.

எமது வாழ்த்துக்களுடனும், பிரார்த்தனைகளுடனும் முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் இணைந்து கொள்ளுமெனவும் நாம் எதிர்பார்க்கிறோம்.

 மற்றுமொரு முக்கிய விடயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது மேற்படி தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற எமது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களையும் முஸ்லிம் சார்பு ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை. இதனால் சாதனை படைத்த அவ்விரு முஸ்லிம் சகேதரர்களினதும் முக்கியத்துவம் எமது சமூகத்தை சென்றடையவில்லை என்பது கவலைக்குரியது.

மேலும் இங்கு மிகப்பிரதான ஒரு விடயத்தை நமது சமூகத்திலுள்ள பணக்காரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனும் பகிர்ந்துகொள்ள நாம் விரும்புகிறோம்.

இலங்கை முஸ்லிம்கள் அண்மைய காலங்களில் விளையாட்டில் ஜொலிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்வுக்குரிய விடயம்.  சாதனை படைத்த வீரர்கள் தொடர்ந்து மிளிர்வதற்கு நாம் உதவி நல்குவது அவசியமாகிறது. அவ்விரு விளையாட்டு வீரர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவது, மற்றும் அவ்விரு விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்திசெய்வது, அவர்களுக்கு உறுதுணையாக செயலாற்றுவது ஆகிய செயற்பாடுகளில் நாம் கூடிய பங்காற்றமுடியும்.

எமது முஸ்லிம் சமூகத்தின் பரிபூரண ஒத்துழைப்புடன் நமது தாய் நாட்டுக்கும், நமது முஸ்லிம் சமூகத்திற்கும் அவர்கள் நிச்சயமாக பங்களிப்புச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். எமது உதவிகள், ஆதரவுகள் மற்றும் வாழ்த்துக்கள்தான எமது தேசத்திலிருந்து இன்னும்பல முஸ்லிம் விளையாட்டு விருர்கள் உருவாக காரணமாக அமையும்...!

ஆம், நமது முஸ்லிம் முஸ்லிம் சமூகம், நமது முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்காக என்ன செய்யப்போகிறது..??




No comments

Powered by Blogger.