'ஹலால்' க்கு எதிரான போராட்டத்தை ஏற்கமுடியாது - சிங்கள சகோதரர்கள் தெரிவிப்பு
(ஜே.எம்)
கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு துரும்பொன்று கிடைத்தாலும் அவன் மகிழ்ச்சியடையலாம். அதனை ஆதாரமாகக் கொண்டு அவன் கரை சேரலாம் என நினைக்க இடமுண்டு.
இதுபோல் துன்பத்தில் மிதக்கும் சிலருக்கு ஒரு சில ஆறுதல் வார்த்தைகள் பால் வார்த்தது போலாகலாம்.
அண்மைகாலமாக முஸ்லிம் வெறுப்புக் கோஷம் பற்றி பரவலாகப் பேசப் படும் நிலையில் பெரும்பான்மை மக்களில் நாடித்துடிப்பை அறிய வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் அறிய வேண்டும் என்பதும் எமது இனத்தின் மீது பற்றுதல் உள்ள அனைவரும் ஆவலாக இருப்பது சாதாரண விடயமே.
அரசு சாதாரணமாக 'அது ஒரு சிறிய குழு' என்று கூறுவதைக் கொண்டும் அரசு அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காததையும் வைத்தும் ஒரு சிலர் நாடி பிடித்துப் பார்த்து விட்டனர். அண்மையில் முற்போக்கு எண்ணம் கொண்ட எமது முஸ்லிம் அரசியல் வாதி ஒருவர் 'பாதுகாப்போம் என்ற உறுதி மொழியல்ல, சட்ட நடவடிக்கை தேவை' என்ற கருத்தையும் முன்வைக்கப்பட்டதை ஒரு ஊடகத்தினுடாகக் காணமுடிந்தது.
ஆனால் சிங்கள மக்களின் நிலைப்பாடு எத்தகையது என்பதை படம் பிடித்துக் காட்டும் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இதன் மூலமும் தேவையாயின் நாடி பிடித்துப் பார்க்கமுடியும். விடயத்திற்கு வருவோம்,,
இலங்கை மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் மனதை வென்ற ஒரு இணையம் தான் 'லங்காதீப ஒன்லைன்.'
அது பின்வரும் செய்தியை 25.12.2012 வெளியிட்டுள்ளது,,
' எம்பிலிபிட்டியாவில் இடம் பெற்ற ஹலால் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் 100 பிக்குகள் வரையில் பங்கு கொண்டனர். இதற்கு எம்பிலிப்பிட்டிய நகரசபைத் தலைவர் வேவல்துவே ஞானப்பிரபா தேரர், ஜாதிக ஹெல உரிமை கட்சியின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எம்பிலிபிட்டிய காவன்திஸ்ஸ விகாரையில் இருந்து போமலுவ விகாரை வரை இவர்கள் ஊர்வலத்தில் வந்து கூட்டமொன்றை நடத்தினர்.
இந்த எதிர்ப்புப் பேரணி தொடர்பாக எம்பிலிப் பிட்டிய நகர சபையின் ஐ.ம.சு.கூ. அங்கத்தவர் விஜித்த புஞ்சிஹேவா, மற்றும் ஐ.தே.க. அங்கத்தவர் லசந்த சிரிபுர ஆகியோர் தெரிவித்ததாவது,
இனவாதம். மதவாதம் என்பன தூண்டிவிடப்படக் கூடாது. தேரர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். நகரிலுள்ள கடை உரிமையாளர்கள் எவரும் இதில் பங்கு கொள்ளவில்லை.' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மிகச்சுருக்கமாக ஒருவசனத்தில் செய்திகளை வெளியிடும் இந்த இணையம் இவ்வளவு விரிவாக எமுதியுள்ளமை ஒரு நல்ல செய்தி. அதனை விட அங்கு குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களும் ஏது நடக்குமோ என கலங்கிப் போயுள்ளவர்களுக்கு பால் வார்ப்பது போலவும் இருக்கிறது. அதனை முழுமையாக கீழே தருகிறோம்.
පාරිභෝගික භාණ්ඩවලට හලාල් සහතිකය ගැනීමේදී ව්යාපාරිකයනට අනවශ්ය බරක් දැරීමට සිදුවෙතියි භික්ෂූන්වහන්සේ සිය නමක් ඇඹිලිපිය නගරයේදී උද්ඝෝෂණයක් කළහ.
ඇඹිලිපිටිය නගර සභාවේ සභාපති වේවැල්දූවේ ඥානප්රභා හිමියෝ ද ජාතික හෙළ උරුමයේ නායක ආචාර්ය ඕමල්පේ සෝභික හිමියෝ ද ඊට එක් වූහ. ඇඹිලිපිටිය කාවන්තිස්ස රජමහා විහාරයේ සිට භික්ෂූන් වහන්සේ ඇඹිලිපිටි නගරයේ බෝමළු විහාරයට පැමිණ රැස්වීමක් ද පැවැත්වූහ.
මෙම විරෝධය සම්බන්ධයෙන් ඇඹිලිපිටිය නගර සභාවේ සන්ධාන මන්ත්රී විජිත පුංචිහේවා සහ එක්සත් ජාතික පක්ෂ මන්ත්රී ලසන්ත සිරිපුර මහත්වරු පැවසුවේ ජාතිවාදය හා ආගම්වාදය නොඇවිලවිය යුතු බවයි.භික්ෂූන් ගත් ක්රියාමාර්ගය අනුමත නොකර බව ද ඔවුහු කීහ.
නගරයේ වෙළෙඳහල් හිමියෝ මේ උද්ඝෝෂණයට එක් නොවූහ.
இவ்வாக்கம் எழுதப் பட்டுக் கொண்டிருக்கும் நேரம் வரை 1500 ற்கு மேற்பட்டவர்கள் வாசித்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டுமே அதற்கு விமாரிசனம் எழுதியுள்ளார். அதுவும் 'இவர்களுக்கு என்ன நடந்துள்ளது?' என்றே கேட்டுள்ளார்.
'මෙයාලට මොකද වෙලා තියෙන්නෙ'
சாதாரணமாக இஸ்லாமிய எதிர்புக் கருத்து ஒன்று பிரசுரமானால் 60 அல்லது 70 பேர் அதனை ஆதரித்து கருத்து வெளியிடுவர். ஆனால் இச் செய்திக்கு ஒரு நடுநிலக் குறிப்பு மட்டுமே உள்ளது என்பதையும் கவனிக்கவும்.
translate in tamil plz
ReplyDelete