Header Ads



மட்டக்களப்பு மத்தி கல்விவலய புதிய அலுவலகக் கட்டிடம் ஏறாவூரில் திறந்து வைப்பு

(அப்துல் அலீம்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய புதிய அலுவலகக் கட்டிடம் ஏறாவூரில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள், காணி காணி அபிவிருத்தி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கூடவே விவசாய கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை மீன்பிடி சிறு கைத்தொழில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலி, தேசிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.எம்.நஸீர், மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன்  உள்ளிட்ட இன்னும் பல கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய கோட்ட மட்டங்களிலிருந்து அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் வருகை தராமல் போனது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக இங்கு முற்று முழுவதுமாகத் தமிழில் பேசிய கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டார்.

காத்தான்குடி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வைப் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு இந்நிகழ்வில் பங்கு பற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதானாலேயே பலரும் இந்நிகழ்வைப் புறக்கணித்திருந்தனர் என்று கூறப்படுகின்றது.













No comments

Powered by Blogger.