உலகில் இப்படியும் நடக்கிறது
ரஷ்யாவின் கரகன்டா நகரில் 43 வயதான ஒருவர் மூக்கு முட்ட ஒரு பாட்டில் வோட்கா குடித்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிவிட்டார். அவர் வளர்த்த நாய் தண்டவாளத்தில் தூங்கிய தனது முதலாளியை பார்த்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக ரெயில் வருவதைப் பார்த்த நாய் முதலாளியைக் காக்க அவரை பிடித்து இழுக்க ஆரம்பித்தது. அது அவரை இழுத்துக் கொண்டிருக்கையில் தண்டவாளத்தில் ஒரு நாய் நிற்பதை ரெயில் ஓட்டுநர் பார்த்துவிட்டார். நாய் அடிபடக் கூடாதே என்று நினைத்து அவர் உடனே ரெயிலை நிறுத்தினார்.
ஆனால் ரெயில் நிற்கும் முன்பு நாய் அதில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தது. அந்த நாயின் முயற்சியால் அதன் முதலாளி காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு விலா எலும்பு முறிவு, தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் வளர்த்த நாய் தன்னுயிரைக் கொடுத்து அவர் உயிரை காப்பாற்றியுள்ளது.
Post a Comment