Header Ads



தனது மகள் குறித்து அச்சப்படும் ஒபாமா



அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தங்கள் குடும்ப அனுபவங்கள் சிலவற்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது தனது மகள் மாலியா குறித்து மிச்செல் ஒபாமா கூறுகையில், “மகள் மாலியாவிற்கு ஒரு மொபைல் போனை நாங்கள் கொடுத்து இருக்கிறோம். எங்களுக்கு என்று சில வரைமுறைகளை வைத்து இருக்கிறோம். அதன்படி அவளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவளுக்கு சிலகட்டுப்பாடுகளையும் விதித்துள்ளோம்.

நான் உன்னுடைய அறைக்குள் வருவதை நீ ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது. நீ பேசிக்கொண்டிருக்கும் போது யாருடன் பேசுகிறாய்? பள்ளிப்பாடங்கள் குறித்து பேசுகிறாயா என்று மகள் மாலியாவிடம் நான் கேட்பேன்” என்றார்.

அதிபர் பராக் ஒபாமா கூறும்போது, “எனது குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். மகள் மாலியா தற்பொழுது இளைஞர்களிடமிருந்து போன் அழைப்புகளை பெறும் அளவிற்கான வயதை அடைந்துவிட்டாள்.  நாங்கள் ஒரு ரகசிய உளவு அமைப்பு போல நடந்து கொள்கிறோமா? எப்படி? என்று அவளிடம் நான் அடிக்கடி கேட்பேன்.

உங்களுடைய வாழ்க்கையின் கடுமையான நேரங்களை சந்திக்கிறபோது உங்களுக்குள் ஒரு மரியாதையும் அன்பும் அதிகரிப்பதை உணரமுடியும்” என்றார். 

1 comment:

  1. phongada neengalum ungada.............................................palakka walakkamum.

    ReplyDelete

Powered by Blogger.