எகிப்திய யூதர்களை நாடு திரும்புமாறு அழைக்கும் இஹ்வானுல் முஸ்லிமின்
(TN) இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்த எகிப்தியர் மீண்டும் தாய்நாடு திரும்புமாறும் அவர்களுடைய சொத்துக்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும் எகிப்தின் ஆளும் சக்தியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினர் இஸ்ஸாம் அல் எரியான் அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் துணைத் தலைவரான அல் எரியான், ‘டிரீம் டிவி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
“மனித இனத்திற்கு எதிராக குற்றச் செயலில் ஈடுபடும் இனவாத அரசுடன் இருப்பதை மறுத்து அனைத்து எகிப்து யூதர்களும் தாய்நாடு திரும்பவேண்டும். கமால் அப்துல் நாஸர் யூதர்களை வெளியேற்றியது அவர் அரபு நில ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாக இருந்ததை காட்டுகிறது. எகிப்தியர்கள் தமது தாய்நாடு திரும்புவதை எவராலும் தடுக்க முடியாது.
அத்துடன் யூதர்களுக்கு அவர்களது சொத்துக்கள் திருப்பி அளிக்கப்படும். நிலத்திற்கு திரும்ப அவர்கள் இடமளிக்க வேண்டும். அதனை எவராலும் தடுக்க முடியாது” என்று அல் எரியான் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
நல்ல விஷயம். ஆனால் இதே விஷயம் ஈரானில் நடந்திருந்தால் என்ன குதி குதித்திருப்பீர்கள்.
ReplyDelete