முஸ்லிம்களின் கடைசி இரத்தம் சிங்கள மண்ணிலேயே சிந்த வேணடும் - அப்துல் சத்தார்
(இக்பால் அலி)
நாங்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் எங்களுடைய கடைசி இரத்தம் இந்த சிங்கள மண்ணிலேயே சிந்த வேணடும். 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின் போது தமிழர்கள் வடக்கு கிழக்கு நோக்கிச் சென்றார்கள். அவர்கள் அங்கு செல்வதற்கு இடங்கள் இருந்தன. அனால் நாங்கள் சொந்த இடங்களை விட்டுப் போவதற்கு முடியாது அப்படி நாங்கள் இந்தப் பிறந்த மண்ணை விட்டு ஒடுவதற்கு இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் கோழைகள் அல்ல என்று குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் முஸ்லிம்களுக்கிடையே நல்லுறவையும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தும் வகையில் குருநாகல் மாவட்ட உலமாக்களுக்கிடையிலான சந்திப்பு குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெஹ் சித்தீக் தலைமையில் குளியாப்பிடிய ஹொரம்பாவ குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் கட்டிடத்தில் நேற்று 23-12-12 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் அங்கு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,
சிங்கள மக்களில் அநேகமானவர்கள் மிக நல்லவர்கள். சிங்கள மக்கள் ஆதரிக்காத ஒரு குறிப்பிட்ட சிலரே இந்த செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். சிங்களப் பெரும்பான்மை மக்கள் இதனை ஆதரிக்கவில்லை. சிங்கள முஸ்லிம் தொன்று தொட்டு ஒற்றுமையாகவும் பரஸ்பர நல்லெண்ணத்துடனும் நல்ல வாழ்ந்து வருகின்றார்கள். இதனைச் சகித்துக் கொள்ளாத தீய சக்திகள் தற்போது நாட்டைக் குழப்ப வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் இந்தப்பகுதியில் எங்கள் மொழி சிங்களமாகும் அந்த வகையில் சிங்கள மக்களிலிருந்து எங்களைப் பிளவு படுத்துவது இலேசானதல்ல. அப்படி இந்த நாட்டின் தமிழர்கள் மேல் தொடுக்கப்பட்ட யுத்தம் முப்பது ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் முஸ்லிம் மீது இப்படியான ஒரு யுத்தம் திணிக்கப்படுமானால் இந்த நாட்டின் அழிவு வரைக்கும் அந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது.
இந்த நெருக்கடியிலிருந்து எங்களை பாதுகாக்க எங்களுக்கான ஆயுதமும் அதற்கான போராட்டமும் முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமையேயாகும். இன்று இதற்கான தேவைப்பாடு எழுந்துள்ளது. இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேன அமைப்பு மற்றும் ஹெலஉருமய போன்ற அமைப்புக்களுடைய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கவும் முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் எமக்கிடையே ஒற்றுமை அவசியம். எமக்கிடையே பல்வேறு கூறுகளாகப் பிரிந்து தம்மைத் தாமே காட்டிக் கொடுக்கும் சக்திகளாக இன்று நாங்கள் மாறியுள்ளோம்.
இதனை எந்நாளும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இதற்காக எல்லோரும் ஒன்று பட்டு புத்திசாலித்தனமாக போராட வேண்டியுள்ளது.
முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தையும் மற்றும் பிரதான வளங்களை முடக்கும் சதித்திட்டங்கள் தற்போது முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான சுரொட்டிகள் காணப்படுகின்றன. பிரபல்யமான வர்த்தக நிலையங்களுக்குச் செல்லாதே, முஸ்லிம்களுடைய பிரபல்யமான விநியோகப் பொருட்களை வாங்காமல் பகிஷகரிக்கத் தூண்டுதல், குருநாகலில் பள்ளிவாசல்கள் மீது தொடுக்கப்பட்ட அத்துமீரல்கள், பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிரான தொடர்ச்சியான நெருக்குதல். ஆர்ப்பாட்டங்கள் துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தல். கையடக்கத் தொலைபேசி மூலமாக குறுந் செய்தி அனுப்புதல், சிங்கள யுவதிகளை திருமணம் முடித்து அவர்களை அடிமைகளாகப் பயன்படுத்துதல் இது போன்ற தீய செயற்பாடுகள் எமக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் சின்னச் சின்ன விடயங்களுக்காக நாங்கள் பிரிந்து நின்று சண்டை போடுகின்றோம். எமது நாட்டில் தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? அவர்களும் நல்ல காரியங்கள்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். பறகஹதெனியவிலுள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினர் இருக்கின்றார்கள். அவர்களுடைய பணி மிகவும் சிறப்பானதாக இருந்து கொண்டிருக்கிறது. ஜமாஅத்தே இஸ்லாமிய அமைப்பாக இருந்தாலும் என்ன ? இங்குள்ள அனைத்து அமைப்புக்களும் நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.
தம் இயக்க நலனையும் கொள்கை நலனையும் வைத்துக் கொண்டு தமக்குள்ளே விமர்சனம் செய்வதை தவிர்த்து விட்டு முஸ்லிம்களின் இருப்பையும் பாதுகாப்பு நலனையும் மேற் கொள்ள வேண்டும். விசேடமாக முஸ்லிம் அரசியலவாதிகள் தமக்குள்ள பலப்பரீட்சையை விட்டு விட்டு நாளை எமக்கு வரவுள்ள இந்த பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்ளை எப்படி பாதுகாப்பது என்ற தீர்க்க தரிசனமான முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கள மண் என்று நாமே சொல்லிவிடுவது எமக்குள்ள உரிமையை நாமே பறிகொடுப்பதாகும். எமது மண் அல்லது இலங்கை மண் என்று சொல்வதே பொருத்தம்
ReplyDeletebe with u,appreciate Mr saththar
ReplyDelete