நீதித்துறை தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றுமொரு அதிர்ச்சி..!
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணைக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் இன்று -3-12-2012 தீர்மானித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுத் தாக்கல் செய்திருந்த இந்த மனுவில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 78-A பிரிவை சட்டப்பூர்வமற்றது என தீர்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மனுவை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, பிரியசாத் டெப் மற்றும் ஈவா வணசுந்தர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு தொடர்பிலுள்ள ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்த நீதிமன்றம் பிரதிவாதிள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்து இரண்டு வாரங்கள் கடந்ததன் பின்னர் அது தொடர்பாக பதில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு மனுதார்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Post a Comment