அம்பாரை கரையோர பிரதேசத்தில் கரையொதுங்கிய தேக்கு மரங்கள் (படங்கள்)
(எம்.எம்.ஜபீர்)
இவ்வாறு கரையொதுங்கிய மரங்களை வனவள திணைக்கள அதிகாரிகளான எம்.எஸ்.எம்.இப்னுமாஜா, ஏ.எச்.எம்.கியாஸ் தலைமையிலான குழுவினரும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழவினரும் இணைந்து அரச உடைமையாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்று கல்முனை, காரைதீவு.நிந்தவூர், அட்டப்பள்ளம் ஆகிய கடற் பிரதேசங்களில் அதிகளவு தேக்கு மரங்கள் கரையொதுங்கியுள்ளன. இவற்றின் பெறுமதி 10இலட்சம் என வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இம் மரங்கள் அம்பாரை அரச மரக்கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment